செஸ் ஒலிம்பியாட் | அஜர்பைஜானுடன் டிரா செய்தது இந்திய பி அணி

By பெ.மாரிமுத்து

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 9-வது சுற்றான நேற்று ஓபன் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ஏ – பிரேசில் அணியை எதிர்த்து விளையாடியது.

வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய விதித் குஜராத்தி, 48-வது நகர்த்தலின் போது அலெக்ஸாண்டருக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். அர்ஜுன் எரிகைசி, 63-வது காய் நகர்த்தலின் போது மெஹிதாரியன் கிரிகோரையும், சசிகிரண் 49-வது காய் நகர்த்தலின் போது டைமண்ட் ஆந்த்ரேவையும் வீழ்த்தினர். ஹரிகிருஷ்ணா பென்டலா, சுபி லூயிஸ் பாலோவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் பிரேசிலை தோற்கடித்தது.

இந்திய பி அணியானது வலுவான அஜர்பைஜானுடன் மோதியது. டி.குகேஷ், மமேதியரோவ் ஷக்ரியாவுக்கு எதிரான ஆட்டத்தைடிரா செய்தார். சரின் நிகல், மமேடோவ் ரஃவுபிற்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆர்.பிரக்ஞானந்தா, துரார்பெய்லி வாசிஃப்பை தோற்கடித்தார். அதேவேளையில் சத்வானி ரவுனக் அபாசோவ் நிஜாத்திடம் வீழ்ந்தார். இதன் மூலம் அஜர்பைஜானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய பி அணி 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது.

இந்திய சி அணியானது பராகுவேவை எதிர்கொண்டது. இதில் கங்குலி சூர்யா சேகர், பச்மேன்-ஆக்செலிடம் தோல்வியடைந்தார். அபிமன்யு ஜகாரியாஸ், எம் ரூபனை வீழ்த்தினார். கார்த்திகேயன் முரளி, கியூபாஸ் ஜோஸ் பெர்னாண்டோவை தோற்கடித்தார். எஸ்.பி.சேதுராமன் டெல்கடோ ராமிரெஸ் நியூரிஸஸை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய சி அணி 3-1 என்ற கணக்கில் பராகுவேயை தோற்கடித்தது.

மகளிர் பிரிவில் இந்தியா ஏ, போலந்துடன் மோதியது. இதில் கோனேரு ஹம்பி - கஷ்லின்ஸ்கயா அலினா, ஹரிகா துரோணவல்லி - சோக்கோ மோனிகா, தானியா சச்தேவ் - மல்லிக்கா மரியா ஆகியோர் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தது. இதனால் ஆர்.வைஷாலி - கியோல்பாசா ஒலிவியா மோதிய ஆட்டம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. முடிவில் கியோல்பாசா ஒலிவியா, வைஷாலியை வீழ்த்தினார். இதன் மூலம் போலந்து அணி 2.5-1.5 என்ற கணக்கில் இந்திய ஏ அணியை தோற்கடித்தது.

இந்தியா பி அணி, சுவிட்சர்லாந்தை 4-0 என்ற கணக்கில் வென்றது. இதில் கோம்ஸ் மேரி அன் 35-வது நகர்த்தலின் போது ஹெய்னாட்ஸ் குண்டுலாவை தோற்கடித்தார். வந்திகா அகர்வால் ஜார்ஜஸ்கு லீனாவையும், பத்மினி ரவுத், ஹக்கிமிஃபர்ட் கஜலையும், திவ்யா தேஷ்முக், டி செரோக்ஸ் காமிலையும் தோற்கடித்தனர்.

இந்தியா சி அணியானது, எஸ்டோனியாவுடன் மோதியது. இதில் ஈஷா கரவாடே- நர்வா மாவி மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. பி.வி.நந்திதா, ஓல்டே மார்கரெட்டை வீழ்த்தினார். விஷ்வா வஸ்னாவாலா, ப்ளாக்கின் சோபியாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். சாஹிதி வர்ஷினி சினிட்சினா அனஸ்டாசியாவை தோற்கடித்தார். இதன் மூலம் இந்திய சி அணி 3-1 என்ற கணக்கில் எஸ்டோனியாவை வீழ்த்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்