பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் தொடரில் குத்துச்சண்டை விளையாட்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் இந்திய வீராங்கனை நீத்து கங்கஸ். இந்த பதக்கத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
21 வயதான அவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். மினிமம் வெயிட் பிரிவான 48 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை டெமி ரெஸ்டனை எதிர்த்து விளையாடினார். பரபரப்பான இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் ஆட்டத்தை வென்றார். அதன் மூலம் பதக்கம் உறுதியானது.
இந்நிலையில், தான் வென்ற தங்கப் பதக்கத்தை தனது தந்தைக்கு அர்பணிப்பதாகவும், இது அனைத்தும் அவருக்காகத்தான் எனவும் தெரிவித்துள்ளார் நீத்து.
“எனது குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது. குறிப்பாக எனது அப்பா. கடந்த மூன்று ஆண்டுகளாக தினந்தோறும் என்னை பயிற்சிக்கு அழைத்து சென்று வருவது அவர்தான். நான் பெண் பிள்ளை, எனக்கு ஏன் விளையாட்டு என அவர் ஒருநாளும் சொல்லியதில்லை. எனது பயிற்சி மற்றும் டயட் என அனைத்திலும் கவனம் எடுத்துக்கொள்வதும் அவர்தான்.
» SSLV ராக்கெட்டின் முதல் பயணம் | இரண்டு செயற்கைக்கோள்களும் பயன்படுத்த இயலாது - இஸ்ரோ அறிவிப்பு
நான் பதக்கம் வென்றதில் அவருக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. அவரே களத்தில் போட்டி போட்டு வென்றது போல இந்த வெற்றியை பார்க்கிறார்.
மாலை 4.30 மணி அளவில் எனது பயிற்சி தொடங்கும். எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் நான் நேரத்தை வீணடித்து வருவதாக கருதினர். அதை கடந்துதான் என் குடும்பம் எனக்கு ஆதரவு கொடுத்தது. நான் உள்ளே பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது அப்பா வெளியே வெயிலில் நின்று கொண்டிருப்பார்” என தெரிவித்துள்ளார் நீத்து.
இந்தியா இதுவரை 17 தங்கம், 13 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் என 49 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago