IND vs WI | 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள் - டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி

By செய்திப்பிரிவு

புளோரிடா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான 4வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. கடந்தப் போட்டியில் காயத்தால் வெளியேறிய கேப்டன் ரோகித் சர்மா இந்தப் போட்டியில் களமிறங்கினார். அவருடன் வழக்கம் போல சூர்யகுமார் யாதவ் ஓப்பனிங் செய்தார். இருவரும் பவர் பிளே ஓவர்களில் அதிரடி காட்டினர். எனினும், 4.4வது ஓவரிலேயே 33 ரன்களோடு ரோகித் சர்மா முதல் விக்கெட்டாக நடையை கட்டினார்.

அடுத்த ஓவரிலேயே சூர்யகுமார் யாதவ்வும் 24 ரன்களில் அவுட் ஆகினார். இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற தீபக் ஹூடா 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் நிதானமாக ஆடி 44 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் சஞ்சு சாம்சன் 30 ரன்களும், அக்சர் படேல் 20 ரன்களும் எடுத்தனர்.

192 ரன்கள் இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பிராண்டன் கிங் இன்னிங்ஸை அதிரடியாக தொடங்கினாலும் அவர் நீடிக்க தவறினார். அவரை அவேஷ் கான் வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து வந்தவர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் இரண்டு ஓவர்களுக்கு ஒரு விக்கெட் என்னும் கணக்கில் சீரான இடைவெளியில் மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கினர்.

இதனால் 19.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக பூரான், பவல் இருவரும் தலா 24 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணி அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார். அவேஷ் கான், ரவி பிஷ்னோய், அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரையும் 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தொடர்ச்சியாக இந்திய அணி கைப்பற்றியிருக்கும் ஐந்தாவது டி20 தொடர் இதுவாகும். அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக, 13வது முறையாக தொடரை (ஒருநாள், டெஸ்ட், மற்றும் டி20) வெற்றியாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்