CWG 2022 | ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் வெள்ளி வென்று சாதனை

By செய்திப்பிரிவு

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில் ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (steeplechase) போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்துள்ளார். இதன்மூலம் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் பதக்கம் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவினாஷ் பெற்றார்.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே இலக்கை 8.11.20 நிமிடங்களில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கென்யாவைச் சேர்ந்த ஆபிரகாம் இப்போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார். ஓட்டத்தினூடே பல்வேறு தடைகளைக் கடப்பதுதான் இந்த விளையாட்டின் அம்சம்.

மகாராஷ்டிர மாநிலத்தின் பீட் மாவட்டம் பகுதியில் உள்ள மண்ட்வா கிராமத்தில் பிறந்தவர் அவினாஷ். போக்குவரத்து வசதிகளும் இல்லாத தன் கிராமத்திற்கும் பள்ளிக்கும் இடையேயான 7 கி.மீ. தூரத்தில் நடந்து சென்று பயன்றவர். பள்ளி படிப்பிற்கு பின் இந்திய ராணுவத்தில் சேர்ந்தவர், ஸ்டீபிள்சேஸ் பயிற்சியை 2015-ம் ஆண்டிற்கு பிறகு தொடங்கி தேசிய அளவில் பல சாதனைகளை புரிந்தார்.

காமன்வெல்த் போட்டி தொடங்குவதற்கு முன்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இவரிடம் பிரதமர் மோடி பேசினார். மகாராஷ்டிராவிலிருந்து வந்து சியாச்சினில் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய அவரது வாழ்க்கை அனுபவம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றியதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாக அவர் கூறினார். இந்திய ராணுவத்திடம் பெற்ற ஒழுக்கமும், பயிற்சியும் தான் எந்தத் துறையில் சென்றாலும் பிரகாசிக்க உதவுவதாக அவர் கூறினார்.

சியாச்சினில் பணிபுரியும்போது ஸ்டீபிள்சேஸ் விளையாட்டை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று பிரதமர் அப்போது கேட்டார். அதற்கு, தடைகளை கடப்பதே ஸ்டீபிள்சேஸ் என்றும், ராணுவத்தில் இதேபோன்ற பயிற்சி பெற்றதாகவும் அவர் கூறினார்.

இவ்வளவு வேகமாக உடல் எடையை குறைத்த அனுபவம் பற்றி பிரதமர் கேட்டார். ராணுவம் தன்னை விளையாட்டில் சேர ஊக்குவித்ததாகவும், தனக்கு பயிற்சி அளிக்க கூடுதல் நேரம் கிடைத்ததாகவும், இது உடல் எடையை குறைக்க உதவியது என்றும் அவர் கூறியது நினைவுகூரத்தக்கது.

அவினாஷ் வெள்ளியுடன் காமன்வெல்த் தடகள போட்டியில் இந்தியாவுக்கு 4-வது பதக்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இந்தியா இதுவரை இந்தியா 9 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்