CWG 2022 | இந்தியாவின் பிரியங்கா 10,000மீ நடை ஓட்டத்தில் வெள்ளி வென்று சாதனை

By செய்திப்பிரிவு

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டித் தொடரின் 10,000 மீட்டர் நடை ஓட்டத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்டின் 10,000 மீட்டர் நடை ஓட்டம் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை வசப்படுத்தியிருக்கிறார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரியங்கா.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு 10,000 மீட்டர் நடை ஒட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி, பாவ்னா ஜாட் ஆகியோர் பங்கேற்ற இந்தப் போட்டியில் பிரியங்கா 10,000 மீட்டர் தூரத்தை 43 நிமிடங்கள் 38.83 விநாடிகளில் கடந்து இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பிரியங்காவின் இந்த வெள்ளிப் பதக்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இந்தியா இதுவரை இந்தியா 9 தங்கம், 9 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்