CWG 2022 | நீளம் தாண்டுதலில் ஃபவுல் பிளே செய்தாரா ஸ்ரீசங்கர்? - ஓர் எளிய விளக்கம்

By எல்லுச்சாமி கார்த்திக்

நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் தான் தங்கப் பதக்கம் வென்றதாக கருதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் இந்திய தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர். ஆனால், அவருக்கு கிடைத்ததோ வெள்ளிப் பதக்கம். காரணம், அவரது பேஸ்ட் ஜம்ப் ஒன்று ஃபவுல் என அறிவிக்கப்பட்டது. உண்மையில் அவர் தவறு செய்தாரா என்பதைப் பார்ப்போம்.

இந்திய அணியின் பதக்க நம்பிக்கைகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீசங்கர். நீளம் தாண்டுதலில் புலிப் பாய்ச்சல் பாய்ந்து தேசிய சாதனை படைத்தவர். பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் ஆடவர் நீளம் தாண்டுதல் பதக்கம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் அவரது ஆறு வாய்ப்புகளில் 7.60, 7.84, 7.84 மற்றும் 8.08 மீட்டர் நீளம் தாண்டி அசத்தி இருந்தார். அவை அனைத்தும் முறையாக (லீகல்) அவர் தாண்டியதாக சொல்லப்பட்டது. அதே நேரத்தில் நான்கு மற்றும் ஆறாவது வாய்ப்பின்போது அவர் ஃபவுல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஃபவுல் என அறிவிக்கப்பட்டு அதற்கு ரெட் Flag கொடுக்கப்பட்ட அந்த இரண்டு வாய்ப்புகளில் ஒன்றில் அவர் கிட்டத்தட்ட 8.20 மீட்டர் ரேஞ்சுக்கு நீளம் தாண்டி இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இந்த 8.20 மீட்டர் ரேஞ்ச் வாய்ப்பில் அவரது ஷூவின் டோ பகுதிக்கும் டேக் ஆஃப் லீகல் தானா என்பதை சரிபார்க்கும் டேக் ஆஃப் போர்டின் இறுதியில் உள்ள டிஜிட்டல் லேசர் பீம் லைனுக்கும் மில்லிமீட்டர் அளவு இடைவெளி இருப்பது புகைப்படம் ஒன்றில் அப்பட்டமாக தெரிகிறது. இருந்தும் அது ஃபவுல் என அறிவித்திருப்பதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.

இதற்கு உலக தடகள ரூல்-புக்கில் கொண்டுவரப்பட்ட புதிய விதியின் மாற்றம்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்த சர்ச்சை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பலவிதமான கருத்துகளை சொல்லி வருகின்றனர்.

ஸ்ரீசங்கர் என்ன சொன்னார்?

“வரும் நாட்களில் நாங்கள் இந்த டேக் ஆஃப் லைன் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இப்போது வரையில் டேக் ஆஃப் போர்டின் இறுதிமுனையில்தான் ஜம்ப் எடுக்கிறோம். சிறப்பான ஜம்பிற்காக 0 சென்டிமீட்டரில் டேக் ஆஃப் ஆவது நல்ல விஷயம்தான். இருந்தாலும் இது தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் இல்லை. அதனால் இனி 4-5 சென்டிமீட்டர்கள் முன்கூட்டியே டேக் ஆஃப் ஆவது சரியான விஷயமாக இருக்கும். அப்போது இந்த ஃபவுல் சிக்கல் வராது” என ஸ்ரீசங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் ஸ்ரீசங்கரின் நீளம் தாண்டுதல் வீடியோ லிங்க்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்