செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 6 சுற்றுகளின் முடிவில் அர்மேனியா முன்னிலை

By பெ.மாரிமுத்து

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 6 சுற்றுகளின் முடிவில் 3 முறை தங்கப் பதக்கம் வென்ற அர்மேனியா முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் மகளிர் பிரிவில் இநதியா ஏ அணி 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் ஓபன் பிரிவில் நடைபெற்ற 6-வது சுற்றில் இந்தியா பி அணியை 2.5-1.5 என்ற கணக்கில் அர்மேனியா தோற்கடித்தது. இந்திய பி அணியானது அர்மேனியாவிடம் 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இந்திய பி அணி தொடர்ச்சியாக பெற்ற 5 வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

டி.குகேஷ், சர்கிசியன் கேப்ரியலை தோற்கடித்தார். சரின் நிகல் - மெல்குமியன் ஹ்ரான்ட் மோதிய ஆட்டம் டிரா ஆனது. அதிபன், டெர்-சஹாக்யன் சாம்வேலிடமும் சத்வானி ரவுனக், ஹோவன்னிசியன் ராபர்ட்டிடமும் தோல்வியடைந்தனர்.

இந்திய பி அணியை வென்றதன் மூலம்ஓட்டுமொத்தமாக 12 புள்ளிகளுடன் அர்மேனியா முதலிடம் வகிக்கிறது. அந்த அணிஇதுவரை விளையாடிய 6 சுற்றுகளையும் வென்றுள்ளது. அதேவேளையில் இந்திய பி அணி 5 ஆட்டங்களில் கிடைத்த வெற்றியின் மூலம் 3-வது இடத்தில் உள்ளது.

அர்மேனியா ஆட்டம் நடந்த அதேவேளையில் ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி, உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் கவனம் பெற்றது. இந்த ஆட்டத்தை இந்திய ஏ அணி 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது. ஹரிகிருஷ்ணா பென்டலா, அப்துசட்டோரோவ் நோடிர்பெக்கை தோற்கடித்தார். விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். அதேவேளையில் சசிகிரண், இளம் வீரரான வோகிடோவ் ஷம்சிடினின் தாக்குதல் ஆட்டத்தில் வீழ்ந்தார்.

ஓபன் பிரிவில் அர்மேனியாவுக்கு அடுத்த இடத்தில் சாம்பியன் பட்டம்வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட அமெரிக்கா உள்ளது. அந்த அணி தனது 6-வது சுற்றில் ஈரானை 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து 11 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. உஸ்பெகிஸ்தான், பிரான்ஸ், இந்தியா ஏ, நெதர்லாந்து, கியூபா, இந்தியா சி, ஜெர்மனி, கஜகஸ்தான், செர்பியா, பெரு ஆகிய 10 அணிகளும் 10 புள்ளிகளை பெற்று முறையே 4 முதல் 12-வது இடங்களில் உள்ளன. இந்த அணிகள் அனைத்தும் ஒரே புள்ளியை பெற்றிருந்த போதிலும் ஒவ்வொரு வீரர் ஆடிய ஆட்டங்களின் வெற்றி, தோல்வியை பொறுத்து அணிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஸ்பெயின், இஸ்ரேல், கிரீஸ், உக்ரைன், அஜர்பைஜான், ஈரான், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஹங்கேரி, பிலிப்பைன்ஸ், பிரேசில் ஆகிய 12 அணிகள் தலா 9 புள்ளிகளை பெற்றுள்ளன. இன்னும் 5 சுற்றுகள் உள்ளதால் பதக்கம் வெல்ல கடும் போட்டி நிலவக்கூடும்.

இந்தியா ஏ – அஜர்பைஜான்

மகளிர் பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய ஏ அணி, அஜர்பைஜானுடன் மோதுகிறது. இந்திய பி அணி கிரீஸ் அணியையும், இந்திய சி அணி சுவிட்சர்லாந்தையும் சந்திக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்