CWG 2022 | இந்தியாவுக்கு ஆறாவது தங்கப்பதக்கம் - பாரா பளுதூக்குதலில் சாதனை படைத்தார் சுதிர்

By செய்திப்பிரிவு

பர்மிங்காம்: காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு ஆறாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் 134.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார் சுதிர். 34.5 புள்ளிகளைப் பெற்றது என்பது புதிய உலக சாதனையாகும். இந்தப் போட்டி முழுவதுமே மற்ற வீரர்களை விட முன்னணியில் இருந்தார் சுதிர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

இதனிடையே, காமன்வெல்த் வரலாற்றில் நீளம் தாண்டுதலில் வரலாறு படைத்துள்ளார் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர். 7வது நாளான இன்று, நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். காமன்வெல்த் வரலாற்றில் ஆண்கள் நீளம் தாண்டுதலில் கிடைக்கும் முதல் வெள்ளி பதக்கம் இது என்பதால் அவரின் சாதனை கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது.

ஆடவர் நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் 8.08 மீட்டர் தூரம் நீளம் தாண்டி நாட்டின் ஏழாவது வெள்ளிப் பதக்கத்தை வென்றார். நேற்று ஆடவர் உயரம் தாண்டுதலில் தேஜஸ்வின் சங்கர் காமன்வெல்த் வரலாற்றில் தடகளத்தில் இந்தியாவின் முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். அந்தவகையில், காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்கு தடகளத்தில் கிடைக்கும் இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் ஸ்ரீசங்கர் தனது முதல் முயற்சியில் 7.60மீ. தூரமும், அடுத்த இரண்டு முயற்சிகளில் 7.84 மீ தூரமும், ஐந்தாவது முயற்சியில் 8.08 மீட்டர் தூரமும் நீளம் தாண்டி இரண்டாமிடம் பிடித்தார். இதேபிரிவில், கரிபியன் தீவுகளைச் சார்ந்த பஹாமாஸ் நாட்டின் லகுவான் நைர்ன் தங்கப் பதக்கம் வென்றார். இவரும் 8.08 மீட்டர் தூரமும் நீளம் தாண்டி இருந்தார் என்றாலும், இரண்டாவது முயற்சியில் ஸ்ரீசங்கரை விட அதிக தூரம் (7.98 மீ) நீளம் தாண்டியதால் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதனிடையே, மற்றொரு இந்திய வீரரான முஹம்மது அனீஸ் யஹியா, 7.97 மீட்டர் நீளம் தாண்டி இந்த பிரிவில் 5வது இடத்தைப் பிடித்தார்.

வெள்ளிப்பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கர் தமிழகத்தின் எல்லையான கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சார்ந்தவர் ஆவார். நீளம் தாண்டுதலில் தேசிய சாதனை படைத்த பெருமைக்குரிய ஸ்ரீசங்கர் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்