CWG 2022 | தங்கப் பதக்கத்தை ‘12 ஆண்டு காலம் உழைத்த’ தந்தைக்கு அர்ப்பணித்த பாகிஸ்தான் வீரர்

By செய்திப்பிரிவு

பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் தொடரில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பளுதூக்குதல் வீரர் நூ தஸ்தகிர் பட் (Nooh Dastagir Butt). அந்தப் பதக்கத்தை தனது தந்தைக்கு சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்கமில் 2022 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பளுதூக்குதல் விளையாட்டு பிரிவில் இந்திய அணி வீரர்களும், வீராங்கனைகளும் மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளனர். அதன் மூலம் இந்த பிரிவில் இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ள நாடாக திகழ்கிறது. இதில் 3 தங்கப் பதக்கங்கள் அடங்கும்.

பாகிஸ்தான் அணி சார்பில் ஒரே ஒரு தங்கம் மட்டுமே வெல்லப்பட்டுள்ளது. அந்தப் பதக்கத்தை வென்றவர் 24 வயதான பளுதூக்குதல் வீரர் நூ தஸ்தகிர் பட். பாகிஸ்தான் நாட்டின் குஜ்ரன்வாலா நகரை சேர்ந்தவர். இளம் வயது முதலே பளுதூக்குதலில் ஈடுபட்டு வருகிறார். காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 2 வெண்கலம் மற்றும் 2 வெள்ளி வென்றுள்ளார்.

கடந்த 2018 காமன்வெல்த்தில் வெண்கலம் வென்றிருந்தார். நடப்பு காமன்வெல்த்தில் 109+ கிலோ பிரிவில் பங்கேற்றார். மொத்தம் 405 கிலோ எடையை சுமந்து தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். இதன் மூலம் காமன்வெல்த் அரங்கில் பாகிஸ்தானுக்காக தங்கம் வென்ற இரண்டாவது பளுதூக்குதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

“எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவும், பிரார்த்தனைகளும்தான் என்னை இந்த சாதனையை படைக்க செய்துள்ளது. இந்த பதக்கத்தை எனது தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். அவரது 12 ஆண்டு கால உழைப்பு இந்த வெற்றிக்கு பின்னால் உள்ளது. இன்று இந்த மேடையில் நான் நிற்க காரணம் அவர்தான். நாட்டுக்காக பதக்கம் வெல்வது பெருமையான விஷயம். அதுவும் அது தங்கம் என்றால் சொல்லவே வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதே பிரிவில்தான் இந்தியாவின் குர்ப்ரீத் சிங் வெண்கலம் வென்றிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்