பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 18 பதக்கங்களுடன் 6-ம் இடத்தில் நீடிக்கிறது.
22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்தியா மேலும் 4 வெண்கலத்தைக் கைப்பற்றியது. ஆடவர் 109 கிலோ பிரிவில் இந்திய வீரர் லவ்பிரீத் சிங், மொத்தம் 355 கிலோ தூக்கி 3-ம் இடம்பிடித்தார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஸ்னாட்ச் பிரிவில் 163 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 192 கிலோவையும் அவர் தூக்கினார்.
ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோசல், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆடவர் பளுதூக்குதல் 109+ கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் குர்தீப் சிங் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆடவர் உயரம் தாண்டுதலின் இறுதிப் போட்டியில் 2.22 மீட்டர் தூரம் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் தேஜாஸ்வின் சங்கர்.
அதேபோல், ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி அரை இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. ஆடவர் ஹாக்கியில் இந்தியா 8-0 என்ற கணக்கில் கனடாவைத் தோற்கடித்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
24 mins ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago