பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. 4-ம் நாளின் முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களைக் கைப்பற்றியிருந்தது.
4-ம் நாளின்போது மகளிர் ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் வெள்ளியும், ஜூடோ ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் விஜய் குமார் யாதவ் வெண்கலமும், மகளிர் பளுதூக்குதலில் 71 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலமும் வென்றனர்.
இதைத் தொடர்ந்து நேற்று 5-ம் நாளில் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 17-10 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினர். இந்திய அணியில் லவ்லி சவ்பே, பிங்கி, நயன்மோனி சைக்கியா, ரூபா ராணி டிர்கே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
டேபிள் டென்னிஸ் ஆடவர் அணிப் பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை வென்று தங்கப் பதக்கத்தை வசப்படுத்தியது.
ஆடவர் 96 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் விகாஸ் தாக்குர் மொத்தம் 346 கிலோ தூக்கி வெள்ளி பதக்கத்தை வென்றார்.
கலப்பு பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதையடுத்து இந்தப் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை பெற்றுள்ளது.
வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago