செயின்ட் கிட்ஸ்: மூன்றாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா. இந்நிலையில், இரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியின் மேற்கிந்திய தீவுகளும் வென்ற நிலையில் இன்று மூன்றாவது போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் மேற்கிந்திய தீவுகளை பேட்டிங் செய்ய பணித்தார். அந்த அணியின் பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ் இணை 50+ பார்ட்னர்ஷிப் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தது.
பிராண்டன் கிங் 20 ரன்களோடு திருப்திப்பட்டு கொண்டு ஹர்திக் பாண்டியா ஓவரில் அவுட் ஆகி வெளியேறினாலும், கைல் மேயர்ஸ் அரைசதம் கடந்து 73 ரன்கள் குவித்தார். அவரின் உதவியால், மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித், சூர்யகுமார் யாதவ் ஜோடி அதிரடி துவக்கம் கொடுத்தது. முதல் இரண்டு ஓவர்களில் இருவரும் பவுண்டரிகளாக விளாசினர். எனினும் இரண்டாவது ஓவரை வீசிய அல்சாரி ஜோசப் பந்தில் தலா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்த ரோகித் அசௌகரியம் காரணமாக மைதானத்தில் ரிட்டையர்ஹாட் முறையில் வெளியேறினார். இதன்பின் வந்த ஷ்ரேயாஷ் ஐயர் - சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் பயமில்லாமல் 360 டிகிரி ஆட்டத்தை வெளிப்படுத்தி, நாலாபுறமும் மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை சிதறடித்தார்.
» CWG 2022 | இந்தியாவுக்கு 12-வது பதக்கம்: வெள்ளி வென்றார் பளுதூக்குதல் வீரர் விகாஸ் தாகூர்
» CWG 2022 | இந்தியாவுக்கு 5-வது தங்கம்: பட்டத்தை தக்கவைத்தது ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி
1.3 ஓவரில் இணைந்த இந்தக் கூட்டணியை 11.3 ஓவரில் தான் பிரித்தனர் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள். ஷ்ரேயாஷ் ஐயர் 24 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அடுத்த சில ஓவர்கள் வரை தாக்குபிடித்த சூர்யகுமார் யாதவ் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 76 ரன்களோடு அவுட் ஆனார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 4 ரன்களுக்கு வீழ்ந்தாலும் ரிஷப் பந்த் 33 ரன்கள் எடுத்து ஒரு ஓவர் மீதமிருக்கும்போதே அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இதன்மூலம் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago