“சர்வதேச கிரிக்கெட்டில் ஐபிஎல் அணி உரிமையாளர்களின் ஆதிக்கம் ஆபத்தானது” - கில்கிறிஸ்ட்

By செய்திப்பிரிவு

பெல்லிங்கன்: சர்வதேச கிரிக்கெட்டில் ஐபிஎல் அணி உரிமையாளர்களின் ஆதிக்கம் கொஞ்சம் ஆபத்தானதுதான் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பிக் பேஷ் லீக் சீசனை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தவிர்த்து விட்டு, அமீரகத்தில் நடைபெறும் மற்றொரு டி20 லீக் தொடரில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், கில்கிறிஸ்ட் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இது நடந்தால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கமர்ஷியல் ரீதியாக தற்கொலை செய்து கொண்டதற்கு சமம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் யூஏஇ டி20 லீக் தொடரில் முதலீடு செய்துள்ளன. இதில்தான் வார்னர் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.

“பிக்பேஷ் லீக்கில் வார்னர் விளையாட வேண்டுமென கட்டாயப்படுத்த முடியாது. அது எனக்குப் புரிகிறது. வார்னரை மட்டும் இதில் தனியாக குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. இந்த லிஸ்ட்டில் இன்னும் பல வீரர்கள் உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் ஐபிஎல் அணி உரிமையாளர்களின் ஆதிக்கம்தான். அது சர்வதேச கிரிக்கெட்டில் கொஞ்சம் ஆபத்தானதாக உருவெடுத்துள்ளது. திறமைமிக்க வீரர்கள் மீதான உரிமையின் காரணமாக அவர்கள் எங்கே விளையாட வேண்டும், எங்கே விளையாட கூடாது என்பதை உரிமையாளர்கள் தீர்மானிக்கிறார்கள்.

வார்னர் விளையாட மறுத்து விட்டால் நாம் அவரை ஒன்றுமே கேட்க முடியாது. அவரது சந்தை மதிப்பிற்கு தேவையான அனைத்தையும் அவர் செய்துள்ளார்” என சொல்லியுள்ளார் கில்கிறிஸ்ட்.

கடந்த 2013-லிருந்து வார்னர் பிக்பேஷ் லீக் தொடரில் விளையாடுவது இல்லை. கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒப்பந்தத்தின் படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸி. அணிக்காக விளையாடும் வீரர்கள் பிக்பேஷ் லீக் தொடரில் விளையாட வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. மறுபக்கம் பிக்பேஷ் லீக் அணிகள் வார்னர் போன்ற பெரிய வீரருக்கு அதிகளவில் சம்பளம் கொடுத்து விளையாட வைக்கவும் விரும்பவில்லை எனத் தெரிகிறது.

அதேநேரத்தில் வார்னர் அமீரக டி20 லீக் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தடையில்லா சான்றிதழை பெற வேண்டும் என சொல்லப்படுகிறது. வார்னர் மட்டுமல்லாது மேலும் பல ஆஸ்திரேலிய வீரர்கள் இதில் பங்கேற்பார்கள் என சொல்லப்படுகிறது. வெவ்வேறு ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் கரீபியன் பிரீமியர் லீக், தென்னாப்பிரிக்கா டி20 லீக் மற்றும் அமீரக டி20 லீக் போன்ற லீக் அணிகளில் முதலீடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்