வார்னருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குங்கள் - பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆலன் பார்டர் காட்டம்

By செய்திப்பிரிவு

அணிக்கு கேப்டனாக தலைமை தாங்க வார்னருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூடிய விரைவில் நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னருக்கு ஆதரவாக அவர் பேசி உள்ளார்.

கடந்த 2018-இல் தென்னாப்பிரிக்க நாட்டில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடியது. அந்த பயணத்தில் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விதிகளுக்கு அப்பாற்பட்டு பந்தை உப்புக் காகிதம் கொண்டு தேய்த்த குற்றத்திற்காக அப்போதைய ஆஸி. அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பாங்கிராஃப்ட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, அணிக்கு கேப்டனாக தலைமை தாங்க வார்னருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக தெரிகிறது. அதை தான் நீக்க வேண்டும் என ஆலன் பார்டர் வலியுறுத்தியுள்ளார்.

“பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் பந்தை Scratch செய்து, ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஒத்துழைக்கும் வகையில் கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை. என்ன அதை சோடா மூடி, உப்புக் காகிதம் போன்றவற்றை கொண்டு இல்லாமல் நேச்சுரலாக செய்ய வேண்டும். அப்படி செய்தால் அது குற்றத்தில் சேராது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் அவர் செய்த குற்றத்திற்கும் கூடுதலாக தண்டனையை அனுபவித்து வருகிறார். அவர் தண்டனை காலம் முடிந்தது என்பதை கவனிக்க வேண்டும். எல்லா அணியும் இதை செய்துள்ளது, செய்கிறது. கையும் களவுமாக நாம் சிக்கிவிட்டோம். எங்கே மற்ற அணியின் கேப்டன்களை தங்கள் நெஞ்சில் கையை வைத்து ‘தாங்கள் இப்படி செய்யவில்லை’ என சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். அவர்கள் இல்லை என பொய் சொல்வார்கள்” என தெரிவித்துள்ளார்.

35 வயதான டேவிட் வார்னர் இப்போது டாப் கிளாஸ் ஃபார்மில் கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்