சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இரு முறை சாம்பியனான சென்னையின் எஃப்சி (சிஎஃப்சி)அணியின் இந்த சீசனுக்கான சீருடை அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
நீலம், வெள்ளை, மஞ்சள் என 3 விதமான வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ள சீருடையுடன் பயிற்சியாளர் தாமஸ் பிரடாரிக், கேப்டன் அனிருத் தாபா மற்றும் அணி வீரர்களான ரஃபேல் கிரிவெல்லாரோ, ஃபாலோ டியாக்னே, ரொமரியோ ஜேசுராஜ், தேப்ஜித் மஜூம்தார் ஆகியோர் மேடையில் தோன்றினர்.
நிகழ்ச்சியில் அணியின் உரிமையாளர்கள் விடாதானி, அபிஷேக் பச்சன் பங்கேற்றனர். கேப்டன் அனிருத் தாபா கூறும்போது, “இரு வருடங்களுக்கு பிறகு இந்த சீசனில் சென்னை ரசிகர்கள் முன்னிலையில் விளையாட உள்ளதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். கடினமாக பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். கடந்த சீசன் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. இம்முறை இறுதிப் போட்டி வரை முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago