உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

தி ஹேக்கில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கியில் சற்று முன் ஸ்பெயின் அணியை ஆஸ்திரேலியா 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதன் மூலம் தொடர்ச்சியாக 2-வது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்று வீழ்த்தியது. ஸ்பெயின் அணி சனிக்கிழமையன்று இங்கிலாந்துக்கு எதிராக 1-1 என்று டிரா செய்ததன் மூலம் ஒரு புள்ளியைப் பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் டிமதி டீவின் என்ற ஆஸ்திரேலிய வீரர் பந்தை எடுத்துச் சென்று முதல் கோலை அடித்தார்.

பிறகு, ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் கேப்டன் மார்க் நோலெஸ் ஸ்பெயினின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக்கை கோலாக மாற்றி 2-வது கோலை அடித்தார்.

அதன் பிறகும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமே தொடர்ந்தது, இதனால் ஸ்பெயின் தற்காப்பு ஆட்டத்திற்குத் தள்ளப்பட்டது. ஆனாலும் 33வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா ஸ்பெயின் கோல் எல்லைக்குள் புகுந்து நெருக்கடி கொடுக்க ஸ்பெயின் வீர்ர் ஒருவர் தவறு செய்ய பெனால்டி கார்னர் வாய்ப்பு வந்தது. இதனை கெய்ரன் கோவர்ஸ் கோலாக மாற்றினார்.

இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 2 போட்டிகளில் 6 புள்ளிகள் பெற்று பிரிவு ஏ-யில் முன்னிலை வகிக்கிறது. பெல்ஜியம், இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் 3 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

இன்றைய மற்றொரு போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE