இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு தான் ஆதாயம் - ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் ஓய்வு குறித்து ஸ்டைரிஸ்

By செய்திப்பிரிவு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டுக்கு குட் பை சொல்லி உள்ளார். இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு தான் ஆதாயம் என தெரிவித்துள்ளார் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ்.

இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பை கனவை நிஜமாக்கிய நாயகர்களில் ஒருவர் பென் ஸ்டோக்ஸ். அந்த நாட்டுக்காக மொத்தம் 105 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் 2924 ரன்கள் மற்றும் 74 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 31 வயதான ஸ்டோக்ஸ், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் விதமாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இப்போது அவர் சொன்னபடி அதை செய்துள்ளார்.

அவரது ஓய்வு ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை மணியா என்ற கேள்வி ஸ்டைரிஸ் இடம் கேட்கப்பட்டுள்ளது.

"ஒருநாள் கிரிக்கெட் பார்மெட்டுக்கு எந்தவித சிக்கலும் இல்லை. 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் ஒரே ஒரு ஆண்டு தான் எஞ்சி உள்ளது. 2019 தொடர் எப்படி இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரது ஓய்வு ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு தான் ஆதாயமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இந்த தொடரில் ஸ்டோக்ஸ் நிச்சயம் இனி விளையாடுவார் என்ற நிலை தான் இப்போது உள்ளது.

நிச்சயம் 2019 உலகக் கோப்பை தொடரின் பைனலில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் அதற்கடுத்த தொடரில் இல்லாதது இங்கிலாந்துக்கு பின்னடைவு தான்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்