மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 22-ம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதில், ரோஹித் சர்மா ,விராட் கோலி , பும்ரா , ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 3 ஒருநாள் போட்டியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, பும்ரா, சாஹல் பெயர் இடம்பெறவில்லை.
இந்திய அணி விவரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கே.எல் ராகுல், குல்தீப் யாதவ் (இருவரும் உடற்தகுதியை பொறுத்து அணிக்குள் வருவர்), சூர்யகுமார் யாதவ், ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல், அஸ்வின், பிஸ்னொய், புவனேஸ்வர் குமார், அவிஸ்கான், ஹர்சல் படேல், ஹர்ஸ்தீப் சிங் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
» துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்
» 2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை | 9-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்த இந்தியா
வாசிக்க > விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம்: 'விலக வேண்டும்', 'ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும்' - எதிர்ப்பும் ஆதரவும்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago