அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்: ஷமி சாதனை

By செய்திப்பிரிவு

லண்டன்: அதிவேகமாக ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.

இப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. 31 வயதான ஷமி இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மொத்தம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் ஷமி.

ஸ்டோக்ஸ், பட்லர் மற்றும் ஓவர்டன் ஆகியோரது விக்கெட்டை ஷமி வீழ்த்தி இருந்தார். இதில் அவர் பட்லர் விக்கெட்டை வீழ்த்திய போது தான் இந்திய அணி பவுலர்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற சாதனையை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் வீசிய 4071-வது பந்தில் 150-வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இதே போட்டியில் தனது 151-வது விக்கெட்டை கைப்பற்றியும் அசத்தினார்.

இதன் மூலம் இதுநாள் வரை அஜித் அகர்கர் வசம் இருந்த இந்த சாதனை இப்போது ஷமி வசம் ஆகியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE