அஸ்வினை நீக்கும்போது கோலியையும் நீக்கலாம் - முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 450 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வினை விளையாடும் லெவனில் இருந்து நீக்கும்போது, நீண்ட காலமாக பேட்டிங்கில் தடுமாறி வரும் விராட் கோலி டி20 போட்டியில் இன்றியமையாதவர் அல்ல என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணிக்கு வென்று கொடுத்த ஆல் ரவுண்டரான கபில்தேவ் கூறும்போது, “தற்போது டி 20 போட்டியில் விளையாடும் லெவனில் விராட் கோலியை வெளியே அமர வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உலகின் 2-ம் நிலை பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினை டெஸ்ட் அணியில் நீக்கும்போது, முதல் நிலை வீரரான பேட்ஸ்மேனையும் நீக்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்த்தது போன்ற உயர்மட்ட பேட்டிங் தற்போது விராட் கோலியிடம் இல்லை. அவர் சிறப்பாக செயல்படாத பட்சத்தில் திறமையான இளைஞர்களை அணியில் விலக்கி வைக்க முடியாது.

அணியில் ஆரோக்கியமான போட்டியை நான் விரும்புகிறேன். இளம் வீரர்கள் முயற்சி செய்து விராட் கோலியை விஞ்ச வேண்டும். ஒரு பெரிய வீரரை (விராட் கோலி) தேர்வு செய்யவில்லை என்றால் அது அவர், சிறப்பாக செயல்படவில்லை என்பதே காரணமாக இருக்கும். தற்போதைய பார்மை கருத்தில் கொண்டே விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். செல்வாக்கின் அடிப்படையில் தேர்வு செய்யக்கூடாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்