தோனி அகவை 41 - அதிகம் அறிந்த, அறியப்படாத 41 தகவல்கள்

By எல்லுச்சாமி கார்த்திக்

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன், இல்லை இல்லை இப்படி சொல்லலாம் சர்வதேச கிரிக்கெட் களத்தின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக அறியப்படுகிறார் மகேந்திர சிங் தோனி. இன்று அவருக்கு பிறந்தநாள். அவருக்கு வயது 41. அவர் குறித்த அறிந்ததும் அறியாததும் என முத்தான 41 தகவல்கள்.

2007 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு தொடரை விட்டு வெளியேறி இருந்தது இந்திய கிரிக்கெட் அணி. மிகவும் நெருக்கடியான அன்றைய சூழலில் அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி. அது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சர்ப்ரைஸ் முடிவு.

பின்னாளில் அவர் இந்திய அணிக்கு பல கோப்பைகளை வென்று கொடுக்கும் மகத்தான கேப்டன் என யாரும் கணித்திடவில்லை. ஆனால், அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட அனைத்தையும் ஒரு கேப்டனாக அவர் திறம்பட செய்தார். பராசக்தி படத்தில் நடிகர் சிவாஜி சொன்ன வசனம் அப்படியே கச்சிதமாக நிஜ வாழ்வில் பொருந்திப் போவது தோனிக்கு மட்டும் தான். சக்சஸ். சக்சஸ்.. சக்சஸ்… என்பது மட்டும் தான் அது.

தோனி: அறிந்ததும் அறியாததும்

  1. டி20 உலகக் கோப்பை (2007), ஒருநாள் உலகக் கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒன் அண்ட் ஒன்லி கேப்டன் தோனி மட்டும் தான்.
  2. 16 ஆண்டு காலம் கிரிக்கெட் களத்தில் அயராது ஓடி ஆடி விளையாடியவர். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து பார்மெட்டையும் சேர்த்து மொத்தம் அவர் விளையாடியது 538 போட்டிகள். 526 இன்னிங்ஸில் களம் கண்டுள்ளார். அதன் மூலம் 17266 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 16 சதங்கள் மற்றும் 108 அரை சதங்கள் இதில் அடங்கும்.
  3. 2004, டிசம்பர் 23-ஆம் தேதி அன்று சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானார். அவர் விளையாடிய அந்த முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
  4. ஐபிஎல் களத்தில் 10 முறை இறுதிப் போட்டியில் விளையாடியவர். அதிக முறை ஐபிஎல் பிளே-ஆஃப்களில் விளையாடியவர் தோனி.
  5. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலம். அதனை அவரது நண்பர் சந்தோஷ் லால் மூலம் கற்றுக் கொண்டு, அந்த ஷாட் ஆடுவதில் கைதேர்ந்த வீரராக தேர்ச்சி பெற்றார்.
  6. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முதன் முறையாக நம்பர் 1 அணியாக இடம் பெற செய்த கேப்டன் தோனி தான். 2009 வாக்கில் மும்பையில் இலங்கை அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இந்த மைல்கல்லை இந்தியா எட்டியது.
  7. கோலிக்கு முன்னதாக இந்திய அணியை வழிநடத்தி அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற கேப்டனாகவும் அறியப்படுகிறார் தோனி. அவரது தலைமையின் கீழ் மொத்தம் 27 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கோலி தலைமையில் மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.
  8. 2014 வாக்கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதோடு கேப்டன் பொறுப்பை கோலி வசம் ஒப்படைத்தார் தோனி.
  9. அவரது சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்தும் டிசம்பர் மாதம் தான் நடந்துள்ளது. அதே போல அவரது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு அறிவிப்பும் டிசம்பர் மாதம் தான் வெளியானது. அதனால் டிசம்பருக்கும் அவருக்கும் ஏதோ ஒரு வகையில் பந்தம் இருக்கிறது.
  10. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 2006 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் சுமார் 656 நாட்கள் முதல் நிலை பேட்ஸ்மேனாக திகழ்ந்துள்ளார்.
  11. 2011-2020 தசாப்தத்தின் ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட் விருதை வென்றுள்ளார் தோனி. களத்தில் தனது கேம் ஸ்பிரிட்டை வெளிப்படுத்தும் வீரர்களில் முதன்மையானவராக திகழ்ந்தவர் தோனி.
  12. கிரிக்கெட் உலகின் சிறந்த பினிஷர் என அறியப்படுபவர். பல போட்டிகளை இந்திய அணிக்கு வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துள்ளார்.
  13. சர்வதேச களத்தில் 359 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். அதன் மூலம் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் வரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளார்.
  14. விக்கெட் கீப்பரான தோனி சர்வதேச அரங்கில் ஒரே ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் Travis Dowlin தான் அவர் கைப்பற்றிய அந்த ஒரு விக்கெட்.
  15. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார் தோனி. கடந்த 2005-இல் அவர் இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்கள் எடுத்திருந்தார்.
  16. அதே இன்னிங்ஸில் 10 சிக்ஸர்களை ஒருநாள் கிரிக்கெட்டில் விளாசிய முதல் இந்தியர் என்ற மைல்கல்லை எட்டினார்.
  17. மகத்தான கேப்டனாக அறியப்படும் தோனி கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமானவர். ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே, விராட் கோலி மற்றும் ஜடேஜா (ஐபிஎல் - சிஎஸ்கே) தலைமையிலான அணியில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
  18. சர்வதேச கிரிக்கெட்டில் Successful கேப்டனாக இருந்தாலும் அவர் ரஞ்சிக் கோப்பை அல்லது டொமஸ்டிக் தொடர்களில் கோப்பை வென்றது கிடையாது.
  19. நியூசிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய கேப்டன் என அறியப்படுகிறார் தோனி. கடந்த 2009-இல் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.
  20. அதே போல 2010-11 வாக்கில் தோனி தலைமையிலான இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை சமன் செய்து அசத்தி இருந்தது இந்தியா. 3 போட்டிகள் கொண்ட அந்த தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அந்த ஒரு தொடரை தவிர 7 முறை தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
  21. 5 முதல் 7-வது பேட்ஸ்மேன்களுக்கான வரிசையில் (பேட்டிங் ஆர்டர்) விளையாடி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் சுமார் 8273 ரன்களை எடுத்துள்ள ஒரே ஒரு பேட்ஸ்மேன் அவர் தான்.
  22. 2007, 2009, 2010, 2012, 2014 மற்றும் 2016 என ஆறு முறை டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய ஒரே கேப்டன் தோனி தான். மொத்தம் 33 போட்டிகளில் அவர் இந்தியாவை வழி நடத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை கேப்டன்சி ஸ்டேட்களில் இதுவொரு ரெக்கார்டாக உள்ளது.
  23. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு 2018-இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் அணியை தலைமை தாங்கி வழிநடத்தி இருந்தார் தோனி.
  24. ஒருநாள் கிரிக்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டம்பிங் டிஸ்மிஸலை செய்த விக்கெட் கீப்பர் தோனி.
  25. கால்பந்தாட்ட கோல் கீப்பராக தனது கெரியரை தொடங்கியவர்.
  26. 332 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் தோனி. இது எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை.
  27. DRS சிஸ்டத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று தான் சொல்வார்கள். கிரிக்கெட் களத்தில் மின்னல் வேக ஓட்டக்காரர்.
  28. ஒருநாள் போட்டிகளில் 200 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை கடந்த 2017 வாக்கில் தோனி படைத்தார்.
  29. மார்க் பவுச்சர் மற்றும் கில்கிறிஸ்ட்டுக்கு அடுத்ததாக மொத்தம் 829 டிஸ்மிஸலை மேற்கொண்ட விக்கெட் கீப்பராக தோனி திகழ்கிறார்.
  30. சச்சினுக்கு அடுத்ததாக இந்திய அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரராக தோனி உள்ளார்.
  31. மொத்தம் 288 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் தோனி.
  32. ஐபிஎல் அரங்கில் அவர் சதம் பதிவு செய்தது கிடையாது.
  33. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 13 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ளார். அதோடு சென்னையை தனது இரண்டாவது தாய் வீடு என சொல்பவர் அவர். உலகில் அவருக்கு பிடித்த இடங்களில் சென்னையும் ஒன்று.
  34. 2019 ஜனவரியில் ஒருநாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய பேட்ஸ்மேனாக இணைந்தார் தோனி.
  35. ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 வெற்றிகளை பெற்ற கேப்டனாக திகழ்கிறார்.
  36. 2013-இல் இந்திய அணியை தொடர்ச்சியாக ஆறு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற செய்த கேப்டன் தோனி.
  37. நம்பர் 7 ஜெர்சியை அணிந்து விளையாடுபவர் தோனி. இது உள்ளூர் முதல் உலக கிரிக்கெட் வரை அவர் கடைப்பிடித்து வருகிறார். அவரது பிறந்த நாளும், மாதமும் கூட ஏழு தான்.
  38. தோனி வாகனங்களின் பிரியர். ஹம்மர் எச் 2, மிட்சுபிஷி பஜெரோ, ஜி.எம்.சி சியரா பிக்-அப் டிரக், போர்ஷே பாக்ஸ்டர், ஃபெராரி 500 ஜி.டி.ஓ, ஆடி கியூ7, மஹிந்திரா ஸ்கார்பியோ, ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ் மற்றும் ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஆம் ரக வின்டேஜ் கார் என பல கார்களை வைத்துள்ளார். இந்த லிஸ்டில் டஜன் கணக்கிலான பைக்குகளும் அடங்கும்.
  39. ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் கில்கிறிஸ்ட்டும், இந்தியாவின் சச்சினும் தான் தோனிக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள்.
  40. ஜெயித்தாலும் தோற்றாலும் 'சென் துறவி போல' எப்போதும் ஒரே ரியாக்‌ஷனில் இருப்பவர் தோனி.
  41. தனது சர்வதேச கிரிக்கெட் கெரியரை ரன்-அவுட்டில் தொடங்கி, அந்த ரன்-அவுட்டிலேயே முடித்தவர் தோனி. தனது கடைசி கிரிக்கெட் போட்டி சென்னை மண்ணில் தான் என சூளுரைத்துள்ளார் அவர்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தல.

வீடியோ வடிவில் காண...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்