மும்பை: மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தவான் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய விவரத்தையும் வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் முகாமிட்டுள்ளது. அங்கு டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. அந்த தொடர் முடிந்த கையோடு மேற்கிந்திய தீவுகளுக்கு செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி.
அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. வரும் 22 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரையில் அங்கு இந்த சுற்றுப்பயணத்திற்கான போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போது ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடருக்கான அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா, கோலி, பும்ரா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
» ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் 10 இடத்தை இழந்த கோலி; 5-வது இடத்தில் பந்த்
» வெற்றிக்கு பிறகு கோலி-பேர்ஸ்டோ போட்டோவை பகிர்ந்து வஞ்சப்புகழ்ச்சி செய்த இங்கிலாந்து அணி
இந்திய அணி விவரம்: ஷிகர் தவான் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், சாஹல், அக்சர் படேல், ஆவேஷ் கான் , பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago