ஆடும் லெவனில் அஸ்வின் ஏன் இடம் பெறவில்லை என்றால்? - ராகுல் திராவிட் விளக்கம்

By செய்திப்பிரிவு

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர் அஸ்வின் ஆடும் லெவனில் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை போட்டி முடிந்த நிலையில் தெரிவித்துள்ளார் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்.

எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இதன் மூலம் 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்று இந்த தொடர் சமனில் முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலோ அல்லது சமன் செய்திருந்தால் கூட இந்த டெஸ்ட் தொடரை வென்றிருக்கும்.

இந்த போட்டி கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. அப்போதே இந்திய அணியில் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அஸ்வின் ஏன் இல்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. | வாசிக்க > IND vs ENG | ஆடும் லெவனில் அஸ்வின் ஏன் இல்லை? - வலுக்கும் விவாதம்

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட். அப்போது அஸ்வினை ஆடும் லெவனில் சேர்க்காததால் இந்திய அணி வெற்றிக்ககான யுக்தியை மிஸ் செய்துவிட்டதா? என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

"அஸ்வின் போன்றதொரு வீரரை ஆடும் லெவனில் சேர்க்காமல் இருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் முதல் நாள் அன்று காலை ஆடுகளத்தை நாங்கள் பார்வையிட்ட போது அதில் புற்கள் அதிக நிறைந்திருந்தது. அதே நேரத்தில் வேகப்பந்து வீச்சாளருக்கு விக்கெட் சாதகமாக இருக்கும் என நாங்கள் கருதினோம். அதனால் கடந்த காலங்களில் இது மாதிரியான சூழல்களில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பார்வையில் ஷர்துல் தாக்கூருக்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம்" என தெரிவித்துள்ளார் திராவிட்.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 1 ரன் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டி இருந்தார் தாக்கூர். முதல் இன்னிங்ஸில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே அவர் வீழ்த்தி இருந்தார். இந்திய அணி இந்த ஆண்டு மட்டுமே வெளிநாடுகளில் விளையாடி தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்