கரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கினார் கேப்டன் ரோகித் சர்மா

By செய்திப்பிரிவு

லண்டன்: கரோனா தொற்று பாதிப்பில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீண்டுள்ள நிலையில் வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். இது இந்திய அணிக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இந்த பயணத்தில் இரு அணிகளும் விளையாடுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெஸ்ட் போட்டி தொடங்கியது. இருப்பினும் கரோனா தொற்று கண்டறியப்பட்ட காரணத்தால் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக அணியை பும்ரா வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில், ரோகித்துக்கு மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. நோய் தொற்றிலிருந்து மீண்ட நிலையில் அவர் வலைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இப்போது அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இதன் மூலம் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் அவர் இந்திய அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வரவு இந்திய அணிக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. வரும் 7-ஆம் தேதி டி20 தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE