எட்ஜ்பாஸ்டன்: மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. புஜாரா 50 ரன்கள், பந்த் 30 ரன்கள் உடன் ஆட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களும், இங்கிலாந்து 284 ரன்களும் எடுத்தன. இந்திய அணி 132 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் (4), ஹனுமா விஹாரி (11) மற்றும் விராட் கோலி (20) ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். மறுபக்கம் புஜாரா நிலைத்து நின்று விளையாடி வருகிறார். 139 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்களை எட்டியுள்ளார். பந்த், 46 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்துள்ளார். இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து பவுலர்கள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த போட்டியில் மழை குறுக்கீடு இல்லை என்றால் நிச்சயம் முடிவு எட்டப்படும் என தெரிகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் பந்த் மற்றும் ஜடேஜா சதம் விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
» டென்மார்க் | வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம்
» ரோஜர் பெடரர் வருகையை ஃபேஸ்புக்கில் 'வாத்தி கம்மிங்' என கேப்ஷன் போட்டு பகிர்ந்த விம்பிள்டன்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
24 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago