இங்கிலாந்து தொடர்: மீண்டும் ஷிகர், தக்கவைக்கப்பட்ட உம்ரான்- டி20, ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்தில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ள சூழலில், இன்றையப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த இருப்பவர் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இதற்கான அணி விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ரோகித்திற்கு பதிலாக மயங்க் அகர்வால் 16 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய வீரர்களின் விவரங்களையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத ரோகித் சர்மா, இந்த தொடர்களில் பங்கேற்பார் என்றும் அவரே அணியை வழிநடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் டி20 போட்டிக்கு ஒரு வகையான அணியும், இரண்டு மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளுக்கு ஒரு வகையான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணியில் இடம்பெற்ற சீனியர் வீரர்கள் முதல் டி20 போட்டியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அயர்லாந்து தொடரில் இடம்பெற்ற அதே இந்திய அணி அப்படியே கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் எனக் கூறியுள்ளனர். இரண்டு மற்றும் மூன்றாவது போட்டிகளுக்கு முழு பலம் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியிலும் வழக்கமான வீரர்களுடன் முதல் போட்டியில் இடம்பெற்ற ரவி பிஷ்னோய், உம்ரான் மாலிக் போன்றோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் தேர்வாகியுள்ளார். கடந்த சில தொடர்களாக வெளிப்படுத்தி வரும் சிறந்த ஆட்டத்தின் காரணமாக ஷிகர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல், இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒருநாள் அணியில் இடம் கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா தொடர், அயர்லாந்து தொடர் என டி20 அணியில் அர்ஷ்தீப் சிங் தேர்வாகினாலும், ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

2வது மற்றும் 3வது டி20 போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்.

3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கே), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்