மும்பை: "இதுவே கல்லி கிரிக்கெட்டில் நடந்திருந்தால் நான்-ஸ்ட்ரைக்கர் தான் அவுட் என நாங்கள் அறிவிப்போம்" என சொல்லியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். விசித்திரமான முறையில் தனது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் அவுட்டான வீடியோவை பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார் சச்சின்.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் ஹெட்டிங்கிலியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. தற்போது இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகளை இழந்தது 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. நியூசிலாந்து பேட் செய்த போது அந்த அணியின் வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் விசித்திரமான முறையில் அவுட்டாகி இருந்தார். அது இப்போது பேசு பொருளாகி உள்ளது. இந்நிலையில், அந்த வீடியோவை பகிர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கல்லி கிரிக்கெட்டில் இது நடந்திருந்தால் நாங்கள் நான்-ஸ்ட்ரைக்கர் தான் அவுட் என அறிவித்திருப்போம் என தெரிவித்துள்ளார் சச்சின். நிக்கோல்ஸ் 99 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்களை எடுத்திருந்தார். அசல் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார் அவர். இங்கிலாந்து பவுலர்கள் அவரை அவுட் செய்ய முடியாமல் தடுமாறி வந்தனர். அப்போதுதான் அது நடந்தது.
நிக்கோல்ஸ் அவுட்டானது எப்படி? நியூசிலாந்து விளையாடிய முதல் இன்னிங்ஸின் 56-வது ஓவரை இங்கிலாந்து வீரர் லீச் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ஸ்ட்ரைட் திசையில் ஆடியிருந்தார் நிக்கோல்ஸ். ஆனால் எதிர்பாராத விதமாக பந்து நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் விளையாடிக் கொண்டிருந்த மிட்செல் பேட்டில் பட்டு நேராக ஃபீல்டரின் கைகளில் தஞ்சம் அடைந்தது. தொடர்ந்து அவர் அவுட் என அறிவிக்கப்பட்டார். இருந்தாலும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து வீரர்கள் உட்பட போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அவர் எப்படி அவுட்டானார் என்பது முதலில் கொஞ்சம் அறியாமல் தான் இருந்தனர். பின்னர் பிளே செய்யப்பட்ட வீடியோ ரீ-பிளேயில் தான் அவர் எப்படி அவுட்டானார் என்பது தெரிந்து.
» பிஃபா தரவரிசை | 104-வது இடத்திற்கு முன்னேறிய இந்திய ஆடவர் கால்பந்து அணி
» இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட்களில் 3 சதங்களைப் பதிவு செய்த நியூசிலாந்து வீரர் மிட்செல்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago