‘T20 WC அணிக்கு எடுத்தே ஆகணும்’ - தேர்வுக் குழுவுக்கு டிகே தரும் அழுத்தமும் வாய்ப்பும்

By எல்லுச்சாமி கார்த்திக்

எதிர்வரும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பாரா என்பதை ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக். இந்த முறை டி20 ஃபார்மெட்டில் அவரது கம்பேக் அமைந்துள்ளது. வந்த வேகத்தில் ஒரு அரை சதமும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவர் பதிவு செய்துவிட்டார். அதற்கு முழுமுதற் காரணம் அண்மையில் முடிந்த 15-வது ஐபிஎல் சீசன் தான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் அவர். அதற்கு முந்தைய சீசன்களில் சுமாரான பர்ஃபாமென்ஸை கொடுத்திருந்தார்.

அப்போது வர்ணனையாளராகள் அவரை கேலி செய்யும் விதமாக பேசி இருந்தனர். "அவர் முழுநேர வர்ணனையாளர். பகுதி நேர கிரிக்கெட் வீரர்" என வர்ணனையாளர் ஒருவர் சொல்லி இருந்தார். ஏனெனில், இடையில் இந்திய அணி விளையாடிய போட்டியில் வர்ணனையாளர் பணியையும் தினேஷ் கார்த்திக் கவனித்திருந்தார். அதை மனதில் வைத்து அந்த கமென்ட் அவர் மீது வைக்கப்பட்டது.

இந்நிலையில், 15-வது சீசனில் பெங்களூரு அணி சார்பில் 5.5 கோடி ரூபாய்க்கு தினேஷ் கார்த்திக் ஏலத்தில் வாங்கப்பட்டார். அதன் மூலம் அந்த அணிக்காக 16 போட்டிகள் விளையாடி 330 ரன்கள் சேர்த்தார். அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 183.33. அதன் காரணமாக அவருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

குறிப்பாக ஐபிஎல் விளையாடிய போதே எதிர்வரும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் டிகே-வுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என பல தரப்பில் சொல்லப்பட்டு வந்தது. தற்போது முடிந்துள்ள தென்னாப்பிரிக்க தொடருக்கு பிறகு அந்த கருத்து பரவலாக எதிரொலித்து வருகிறது.

இந்தச் சூழலில் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடிக்க அவருக்கு வாய்ப்பு உள்ளதா என்பதை அலசுகிறது பின்வரும் வீடியோ. இதில் கபில் தேவ், சுனில் கவாஸ்கர், கவுதம் கம்பீர், இர்பான் பதான், ராகுல் டிராவிட் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சொல்லியுள்ள கருத்துகளின் அடிப்படையில் அவருக்கான வாய்ப்பு குறித்து விரிவான விளக்கம் கொடுப்பட்டுள்ளது.

வீடியோ வடிவில் முழுமையான அலசல் இங்கே...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE