வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளரை கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும் - இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய, சர்வதேச போட்டிகளின் போது வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர் கட்டாயம் செல்ல வேண்டும் என்று இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்லோவேனியாவில் நடைபெற உள்ள சைக்கிளிங் போட்டிகளில் பங்கேற்பதற்காக 6 பேர் கொண்ட இந்திய குழு அந்நாட்டுக்கு அண்மையில் சென்றது. அதில் 5 வீரர்கள், ஒரு வீராங்கனை இடம்பெற்றிருந்தனர். இக்குழுவுக்கு ஆர்.கே. சர்மா தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஆர்.கே. சர்மா தனக்கு பாலியல் ரீதியில் தொல்லை தருவதாக குழுவில் இடம்பெற்றிருந்த வீராங்கனை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் புகார் செய்தார். இதையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஆர்.கே. சர்மா நீக்கப்பட்டு அவர் மீது துறை ரீதியிலான விசாரணை தொடங்கியுள்ளது.

அதேபோல், ஜெர்மனியில் நடந்த பயிற்சி வகுப்புகளின்போது தனது பயிற்சியாளர் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொள்ள முயற்சித்ததாக படகு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை ஒருவர் குற்றம்சாட்டினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புதிய விதிகளை இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேசிய, சர்வதேச போட்டிகளின்போது வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர் கட்டாயம் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேசிய பயிற்சி முகாம்களிலும், வெளிநாட்டு போட்டிகள், முகாம்களுக்காக வீராங்கனைகள்செல்லும்போது அந்தக் குழுவில் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அவர் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுடன் தொடர்பில் இருப்பதுடன், வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை செயல்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வீரர், வீராங்கனைகள் புகார் அளித்தால், பொறுப்பான அதிகாரிகளுக்கு அந்தப் புகாரை அனுப்பி நடவடிக்கை எடுக்க வகை செய்வார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், சங்கங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்