துபாய்: ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் 68 இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார் இந்திய பேட்ஸ்மேன் இஷான் கிஷன்.
23 வயதான கிஷன், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடி 164 ரன்களை குவித்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும். இந்த தொடரில் மேலும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன. அதிலும் அவர் தனது ரன் வேட்டையை தொடர வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் பார்மெட்டுக்கான தரவரிசை இன்று (ஜூன் 15) வெளியிடப்பட்டது. இதில் டி20 பேட்டிங் தரவரிசையில் டாப் 10 இடத்தை பிடித்து அசத்தியுள்ளார் இஷான் கிஷன்.
சர்வதேச அளவிலான இந்த பேட்டிங் தரவரிசையில் கிட்டத்தட்ட 68 இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தை பிடித்துள்ளார் அவர். டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் கே.எல்.ராகுல் (14), ரோகித் சர்மா (16), ஷ்ரேயஸ் ஐயர் (17) மற்றும் விராட் கோலி (21) உள்ளனர். பவுலர்களில் சாஹல், எட்டு இடங்கள் முன்னேறி 26-வது இடம் பிடித்துள்ளார். புவனேஷ்வர் குமார், 11-வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ரோகித் (8), கோலி (10) உள்ளனர். டாப் 10 பவுலர்களுக்கான தரவரிசையில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் அஷ்வின் மற்றும் பும்ரா உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா முதல் இடத்தில் உள்ளார். அஷ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் 10 பேட்ஸ்மேன்களில் விராட் (3) மற்றும் ரோகித் (4) உள்ளனர். பவுலர்களில் பும்ரா ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago