கொல்கத்தா: ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023-ம் ஆண்டு ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்களின் 3-வது பகுதி நடைபெற்று வருகிறது. இதில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகளும், 2-வது இடத்தை பிடிக்கும் 5 சிறந்த அணிகளும் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
தகுதி சுற்று தொடரில் ‘டி‘ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா தனது முதல் இரு ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், கம்போடியாவை தோற்கடித்து 6 புள்ளிகள் பெற்றிருந்தது. இதே பிரிவில் ஹாங்காங் 6 புள்ளிகள் பெற்ற போதிலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் முதலிடம் வகித்திருந்தது.
இதற்கிடையே ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த பாலஸ்தீனம் தனது கடைசி ஆட்டத்தில் நேற்று பிலிப்பைன்ஸை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து ஆசிய கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது பாலஸ்தீனம் அணி. பிலிப்பைன்ஸ் அணி 4 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்த போதிலும் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
பிலிப்பைன்ஸ் வெளியேறியதால் டி பிரிவில் நேற்றைய நிலவரப்படி 2-வது இடம் வகித்த இந்திய அணியும் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டிக்கு முன்னதாகவே தகுதி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக தகுதி பெறுவது இதுவே முதன்முறை. ஒட்டுமொத்தத்தில் இந்திய அணி 5-வது முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. 1964, 1984, 2011, 2019 ஆகிய ஆணடுகளிலும் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாடி இருந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago