சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் ஓர் இடத்தை இழந்து 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேநேரத்தில் இந்திய வீராங்கனைகள் வரிசையில் அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.மலேசியாவின் நிகோல் டேவிட் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
அவர் கடந்த மாதம் மலேசியாவின் பினாங் நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் அரையிறுதியோடு வெளியேறிய போதும் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். 2006 ஆகஸ்டில் தொடங்கி தற்போது வரையில் 93 மாதங்களாக அவரே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.நடப்பு உலக சாம்பியனான லாரா மசாரோ 2-வது இடத்திலும், எகிப்தின் ரனீம் எல் வெலிலி 3-வது இடத்திலும் உள்ளனர்.
நியூஸிலாந்தின் ஜோலே கிங் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுதான் அவருடைய அதிகபட்ச தரவரிசை. கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச தரவரிசையில் 4-வது இடத்துக்கு முன்னேறிய முதல் நியூஸிலாந்து வீராங்கனை ஜோலே கிங் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago