செஸ் போட்டியை காண செங்கல்பட்டு மாவட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28-ம் தேதி முதல், ஆக. 10-ம் தேதி வரை 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை வரவேற்கும் விதமாக, மாவட்ட அளவில் சிறுவர்களுக்கு போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டது.

இதில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியர் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட, இலவசமாக தங்குமிடத்துடன் அனுமதிக்கப்படுவர். அதன்படி, வரும் ஜூன் 17, 18-ம் தேதிகளில் செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் கல்லூரியில் 15 வயதுக்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்ட மாணவ - மாணவிகள் பங்கு பெறும் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள அகில இந்திய சதுரங்க கழகத்தில் (AICF) பதிவு செய்திருந்தால் போதுமானது. நுழைவுக் கட்டணம் கிடையாது.

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளோர், ஆர். புவனேஸ்வரி - 8438310773, ஆர். முத்துக்குமார் - 9500912898, கோகிலா ராஜேஷ் - 9791144262, சுகன்யா கண்ணன்- 9940567200 ஆகியோரைத் தொடர்பு கொண்டோ அல்லது www.easypaychess.com என்ற இணையதளத்திலோ 14-க்குள் பதிவு செய்ய வேண்டும். இதில், முதல் 25 இடங்களை வெல்லும் மாணவ - மாணவியருக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்