டெல்லி: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி இந்திய அணியை எளிதாக வீழ்த்தியுள்ள தென்னாப்பிரிக்க அணி.
212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணிக்கு குயிண்டன் டி காக் உடன் இணைந்து கேப்டன் டெம்பா பவுமா துவக்கம் கொடுத்தார். 2.2 ஓவர்கள் வரையே இந்த இணை நீடித்தது. புவனேஷ்வர் குமார் இவர்கள் இணையை பிரித்தார். முதல் விக்கெட்டாக 10 ரன்களுக்கு பவுமா நடையைக் கட்டினார். ஒன் டவுன் இடத்தில் ஆல் ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்தார். என்ட்ரியை போலவே அதிரடியிலும் சர்ப்ரைஸாக சிக்ஸ்ர் மழை பொழியவும் செய்தார். எனினும் நீண்ட நேரம் நிலைக்க தவறினார். 29 ரன்கள் எடுத்திருந்த அவரை, ஹர்ஷல் படேல் தனது ஸ்லோ பவுலிங்கால் வெளியேற்ற, அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக்கும் 22 ரன்களுக்கும் அவுட் ஆனார்.
இதன்பின் வந்த வான்டெர் டஸ்ஸன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். அதிரடியை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்ததுடன் கடைசி ஓவரின் முதல் பந்திலேயே அணியை வெற்றிபெறவைத்தனர். மில்லர் 64 ரன்களும் வான்டெர் டஸ்ஸன் 75 ரன்களும் எடுத்தனர்.
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக, ஆப்கானிஸ்தான், ருமேனியா அணிகள் தலா 12 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்திருந்தன. இந்த சாதனையை கடந்த பிப்ரவரியில் இந்திய சமன் செய்திருந்தது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் தொடர்ச்சியாக 13 வெற்றிகளை குவித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டேவிட் மில்லர், வான்டெர் டஸ்ஸன் இருவர் இணைந்து இந்திய அணி படைக்க வேண்டிய சாதனையை தகர்ந்தனர்.
» இந்திய அணிக்காக தன் சாதனையை ஒரு பொருட்டாகவே கருதாத மிதாலி ராஜ் என்னும் கிரிக்கெட் போராளி!
இந்திய அணி இன்னிங்ஸ்: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா, பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியை ரிஷப் பந்த் கேப்டனாக வழிநடத்துகிறார். இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 57 ரன்கள் குவித்தனர். ருதுராஜ் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயருடன் 80 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் இஷான் கிஷன். 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அவுட்டானார் கிஷன். 3 சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரி அவரது இன்னிங்ஸில் அடங்கும்.
15-வது ஐபிஎல் சீசன் முழுவதும் மோசமான ஃபார்மில் ஆடி வந்த அவர், இந்திய அணிக்கு திரும்பிய கையோடு ஃபார்முக்கும் திரும்பியுள்ளார். ஷ்ரேயஸ் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் கேப்டன் பந்த் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இணைந்தனர். இருவரும் அதிவேகமாக ரன் குவிப்பதில் மும்முரமாக இருந்தனர். அதன் மூலம் 18 பந்துகளில் 46 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பந்த் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். பாண்ட்யா 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு இந்தியா 211 ரன்களை எடுத்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago