10 போட்டிகளில் நேற்றைய தோல்வியையும் சேர்த்து 6-ல் தோல்வி அடைந்துள்ள பெங்களூரு அணி தற்போது நாக்-அவுட் போட்டிகளில் ஆடுவது போல் ஒவ்வொரு போட்டியையும் விளையாட வேண்டியுள்ளது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 41-வது போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்க்கு 151 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 53 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் அசாதாரண இன்னிங்ஸ் ஒன்றை ஆட சச்சின் பேபி 13 பந்துகளில் 25 ரன்கள் விளாச 15.3 ஓவர்களில் 98/4 என்று திணறிக்கொண்டிருந்த பெங்களூரு 152 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட வந்த கெயில் 5 ரன்களில் ஏமாற்றமளித்தார், விராட் கோலி 7 ரன்னில் ஸ்லிப்பில் கேட்ச் பிராக்டிஸ் கொடுத்தார்.
தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு போலவே 15.1 ஓவர்களில் படேல், ரோஹித், ரானா, ராயுடு ஆகியோரை இழந்து 98/4 என்று தடுமாறியது. ஆனால் அதன் பிறகு கெய்ரன் பொலார்ட் 19 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 35 ரன்களையும் ஜோஸ் பட்லர் 11 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 29 ரன்களையும் நொறுக்க 18.4 ஓவர்களில் 153/4 என்று மும்பை இந்தியன்ஸ் வென்றது.
இதில் தோல்வி அடைந்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
நாங்கள் இப்போது நாக்-அவுட் போட்டிகளை ஆடிக்கொண்டிருக்கிறோம். கே.எல்.ராகுல் ஆடியது ஒரு கிரேட் இன்னிங்ஸ். 15-வது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்திலேயே இல்லை. இந்த நிலையிலிருந்து ராகுலும் சச்சின் பேபியும் எங்களை தலைநிமிர்த்தினர். ஆனாலும் 20 ரன்கள் குறைவாக எடுத்த நிலையில் இந்த ஸ்கோரை வைத்துக் கொண்டு பவுலர்களை கட்டுப்படுத்துமாறு கூறுவது நியாயமாகாது.
நாங்கள் பேட்டிங்கில் தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்தோம், அதுவும் அத்தகைய ஷாட்களை பொதுவாக பார்த்திருக்க முடியாது, நான் பந்தை திருப்பினேன் உண்மையில் அது ஸ்லிப் கேட்சிங் பிராக்டீஸ்தான்.
மும்பை அணியில் குருணால், ஹர்பஜன் திறமையாக வீசினர். ஏனெனில் இங்கு ஸ்பின்னர்கள் நன்றாக வீசுவது கடினம்.
முடிவில் எங்களுக்கு சாதகமாக விஷயங்கள் அமைந்திருந்தால் வித்தியாசமான முடிவு ஏற்பட்டிருக்கும். இந்தத் தோல்வியினால் நாங்கள் ரிலாக்ஸாக இருக்க வாய்ப்பேயில்லை, ஆனால் இத்தகைய நெருக்கடி நிலையைத்தான் நான் பெரிதும் விரும்புவேன். இங்கிருந்து எல்லா போட்டியையும் வென்றாக வேண்டும். இதனைச் செய்ய நிறைய பண்புநிலை வேண்டும். ஆனால் இதற்காகத்தானே கிரிக்கெட் ஆடுகிறோம்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 mins ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago