டென்னிஸ் தரவரிசை: ரபேல் நடால் 4-ம் இடத்துக்கு முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

லண்டன்: சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை ஏடிபி வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் 14-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த தொடரில் இறுதிப் போட்டி வரை சென்றிருந்த நார்வேயின் காஸ்பர் ரூட் 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 6-வது இடத்தை பிடித்துள்ளார். பிரெஞ்சு ஓபன் கால் இறுதி சுற்றில் ரபேல் நடாலிடம் வீழ்ந்த போதிலும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 8,770 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்.

இதேபோன்று அரை இறுதியுடன் வெளியேறிய ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 8,160 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் தொடர்கிறார். காயம் காரணமாக அரை இறுதி ஆட்டத்தின் போது விலகிய ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் 7,795 புள்ளிகளுடன் 3-ம் இடம் வகிக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்