அரியலூர்: இந்தோனேசியாவில் நடைபெற்ற 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடி, ஊர் திரும்பிய அரியலூர் வீரருக்கு ரயில் நிலையத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரியலூர் நகரில் வசிப்பவர்கள் கூலித் தொழிலாளர்கள் செல்வம்- வளர்மதி தம்பதி. இவர்களது மகன் கார்த்திக்(20). மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், இந்தோனேசியாவில் அண்மையில் நடைபெற்ற 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணியில் விளையாடினார். இப்போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
இந்திய அணியில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் பங்கேற்ற கார்த்திக், தனது முதல் கோலை பதிவு செய்தார்.
இந்நிலையில், நேற்று காலை ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பிய கார்த்திக்குக்கு, அரியலூர் ரயில் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சால்வை அணிவித்து, வெடிவெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago