டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த ஜோ ரூட்: இங்கிலாந்து அணி வெற்றி

By செய்திப்பிரிவு

லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி அணியையும் வெற்றி பெற செய்துள்ளார் அவர்.

31 வயதான ஜோ ரூட் கடந்த 2012 முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை மொத்தம் 118 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 10,015 ரன்கள் குவித்துள்ளார் அவர். இதில் 26 சதம் மற்றும் 53 அரை சதங்களும் அடங்கும். இங்கிலாந்து அணி சார்பில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவரது இந்த மைல்கல்லை சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த 14-வது வீரர் ரூட்.

மிகவும் குறைந்த வயதில் (31 ஆண்டுகள் 157 நாட்கள்) இதனை அவர் எட்டியுள்ளார். இதன் மூலம் சச்சினின் சாதனையை அவர் தகர்த்துள்ளார். சச்சின், 31 ஆண்டுகள் 326 நாட்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைத்திருந்தார்.

நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசி தன் அணியை வெற்றி பெற செய்தார் ரூட். அப்போது தான் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைத்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்