உங்கள் வலியை என்னால் உணர முடிகிறது - சிஎஸ்கே வீரருக்கு ஆறுதல் சொன்ன வார்னர்

By செய்திப்பிரிவு

நியூ சவுத் வேல்ஸ்: 'உங்கள் வலியை என்னால் உணர முடிகிறது' என இங்கிலாந்து பவுலர் பிராட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து வீரர் கான்வேவுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 141 ரன்கள் எடுத்தது. 9 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது நியூசிலாந்து அணி.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து பவுலர் பிராட் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார் டேவான் கான்வே. இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில் சமூக வலைதளமான இன்ஸ்டாவில் ஸ்டோரி பகிர்ந்துள்ளார் டேவிட் வார்னர்.

பிராட் வேகத்தில் பலமுறை தனது விக்கெட்டை பறிகொடுத்தவர் டேவிட் வார்னர். இந்த போட்டியில் பிராட் வேகத்தில் எட்ஜ் வாங்கி அவுட்டாகி இருந்தார் கான்வே. தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்து வருகிறார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்