கோவை: கோவையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ரவுண்ட் ராபின் சுற்றில் கேரள போலீஸ் அணியை இந்தியன் ரயில்வே அணி வீழ்த்தியது.
கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் மற்றும் சக்தி குழுமம் சார்பில் 55-வது ஆண்கள் மற்றும் 19-வது பெண்கள் அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நேற்று தொடங்கின. ஜூன் 3-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது.
ஆண்கள் பிரிவில், டெல்லியை சேர்ந்த இந்தியன் ரயில்வே, இந்திய விமானப்படை, இந்திய கப்பல் படை அணிகள், கேரள மாநில மின்சார வாரியம், பெங்களூருவைச் சேர்ந்த பாங்க் ஆஃப் பரோடா, சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி, தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், திருவனந்தபுரத்திலிருந்து கேரள காவல் துறை, கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் என மொத்தமாக 9 அணிகள் பங்கேற்றுள்ளன.
பெண்கள் பிரிவில் கொல்கத்தாவிலிருந்து கிழக்கு ரயில்வே, ஹூப்ளியிலிருந்து தென்மேற்கு ரயில்வே, செகந்திராபாத்திலிருந்து தென்மத்திய ரயில்வே, மும்பை மத்திய ரயில்வே அணிகள், திருவனந்தபுரத்திலிருந்து கேரள மின்சார வாரியம் , கேரளா காவல் துறை, சென்னை ரைசிங் ஸ்டார், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஆண்கள் பிரிவில் நேற்று மாலை நடைபெற்ற முதல் போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணியும் சென்னை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணியும் மோதின. இதில், கேரள மின்சார வாரிய அணி 74 புள்ளிகளும், ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணி 65 புள்ளிகளும் எடுத்தன. 9 புள்ளிகள் வித்தியாசத்தில் கேரள மின்சார வாரிய அணி வெற்றி பெற்றது.
2-வது போட்டியில், டெல்லி இந்தியன் ரயில்வே அணியை எதிர்த்து கேரள போலீஸ் அணி விளையாடியது. இதில், இந்தியன் ரயில்வே 72, கேரள போலீஸ் 58 புள்ளிகள் பெற்றன. 14 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியன் ரயில்வே அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து, பெண்கள் பிரிவில் கேரள போலீஸ் மற்றும் சென்னை ரைசிங் ஸ்டார், மத்திய ரயில்வே மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணிகள் மோதின. நேற்றிரவு வரை தொடர்ந்து ஆட்டங்கள் நடைபெற்றன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago