பிரெஞ்சு ஓபன்: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்

By செய்திப்பிரிவு

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 195-ம் நிலை வீரரான சுலோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோகோவிச் 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 4-வதுசுற்றுக்கு முன்னேறினார்.

15-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் டியாகோஸ் வார்ட்ஸ்மேன் 6-3, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் 18-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை தோற்கடித்து 4-வது சுற்றில் கால்பதித்தார்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் 18-ம் நிலை வீராங்கனை யான அமெரிக்காவின் கோகோ காஃப் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் எஸ்டோனியாவின் 46-ம் நிலை வீராங்கனையான கையா கனேபியை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்