ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் மே.இ.தீவுகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான மே.இ.தீவுகள் அணியில் டி20 உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்த கெய்ல், டிவைன் பிராவோ, டேரன் சமி, ஆந்த்ரே ரசல் ஆகியோர் இடம்பெறவில்லை.
வழக்கம் போல் மே.இ.தீவுகள் கிரிக்கெட் வாரியம் இவர்கள் மீது தங்கள் பகைமையை நீட்டித்து வருகிறது, மாறாக 2014-க்குப் பிறகு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடாத கெய்ரன் பொலார்ட், நவம்பர் 2015-க்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாத சுனில் நரைன் ஆகியோரை அணியில் தேர்வு செய்துள்ளது மே.இ.தீவுகள்.
மே.இ.தீவுகளில் ஜூன் 3-ம் தேதி முத்தரப்பு ஒருநாள் தொடங்குகிறது. முதல் போட்டியில் மே.இ.தீவுகள், தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. ஜூன் 5-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மே.இ.தீவுகள் மோதுகிறது.
இந்தத் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி வருமாறு:
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), சுலைமான் பென், கார்லோஸ் பிராத்வெய்ட், டேரன் பிராவோ, ஜொனாதன் கார்ட்டர், ஜான்சன் சார்ல்ஸ், ஆந்த்ரே பிளெட்சர், ஷனன் கப்ரியேல், சுனில் நரைன், ஆஷ்லி நர்ஸ், கெய்ரன் பொலார்ட், தினேஷ் ராம்தின், மர்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர்.
கெயில், சமி, டிவைன் பிராவோ காட்டம்:
இந்த அணித்தேர்வுக்கு கடைபிடிக்கப்பட்ட அளவுகோல்கள் குறித்து அணியில் தேர்வு செய்யப்படாத கிறிஸ் கெய்ல், டேரன் சமி, டிவைன் பிராவோ ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கெய்ல், பிராவோ, சமி ஆகியோர் கடந்த ஜனவரியில் நேஜிகோ சூப்பர் 50 தொடரில் விளையாடவில்லை, இவர்கள் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் தொடரில் ஆடிக் கொண்டிருந்தனர். பொலார்ட், நரைன் ஆகியோரும் நேஜிகோ தொடரில் ஆடவில்லை. ஏனெனில் பொலார்ட் காயம், நரைன் பந்து வீச அனுமதியில்லை.
இது குறித்து ட்வீட்டில் சாடிய கிறிஸ் கெய்ல், “பொலார்ட், நரைன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது எப்படி சாத்தியம்? நாகிகோ சூப்பர் 50 தொடரில் சுனில் நரைனை பங்கேற்க மே.இ.தீவுகள் வாரியம் அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது அவரை தேர்வு செய்துள்ளது. பொலார்டும் ஃபிட்டாக இருந்திருந்தால் பிக்பாஷ் லீகே ஆடியிருப்பார். பின் எந்த அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டிவைன் பிராவோ மே.இ.தீவுகளின் தேர்வை ‘மேஜிக்’ என்று கேலி செய்துள்ளார், “ஜோக் ஆஃப் த டே: மே.இ.தீவுகளின் அணித்தேர்வாளர்கள். ஒரு நிமிடம் பொலார்ட், நரைன் நன்றாக ஆடுவதில்லை அதனால் தேவையில்லை, மறுநிமிடம் அவர்கள் சரியாக ஆடுகின்றனர், முத்தரப்புக்கு சரியான தேர்வு அப்படித்தானே? இது மேஜிக்தான்.
ஒருநிமிடம் நாங்கள் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட்டுக்கு தயாராக இருக்க வேண்டும், அடுத்த நிமிடம் நாங்கள் தேவையில்லை. மேஜிக்! மக்களே கூர்ந்து கவனியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
டேரன் சமி தனது ட்வீட்டில், “கெய்ரன் பொலார்ட், உன்னை மீண்டும் அணியில் பார்க்க மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒன்றை மட்டும் எனக்கு தெளிவுபடுத்தி விடு, சூப்பர் 50-யோ ஒருநாள் போட்டிகளிலோ 2014 முதல் நீ விளையாடாத போது உன்னால் மட்டும் எப்படி தேர்வாக முடிந்தது!” என்று சற்றே கேலித்தொனியுடன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
37 mins ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago