ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்திய அணி முதல் ஆட்டத்தை பாகிஸ்தானுக்கு எதிராக 1-1 என டிராவில் முடித்த நிலையில் 2-வது ஆட்டத்தில் 2-5 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி கண்டிருந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் தனது 2-வதுஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் அந்த அணி 4 புள்ளிகளை பெற்றிருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 2-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் வீழ்ந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – இந்தோனேஷியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் குறைந்தது 16 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே 2-வது சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டம் மேற்கொண்ட இந்திய அணி கோல் மழை பொழிந்தது. திர்கே திப்சன் 4 கோல்களும், பெலிமக்கா சுதேவ் 3 கோல்களும், செல்வம் கார்த்தி, விட்டலாச்சார்யா சுனில், ராஜ்பர் பவன் ஆகியோர் தலா 2 கோல்களும் உத்தம் சிங், நிலம் சஜீப், பிரேந்திர லக்ரா ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து அசத்த இந்திய அணி 16-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் சுற்று லீக் ஆட்டத்தின் முடிவில் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்றன. இருப்பினும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்திய அணி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய அணி 19 கோல்களை அடித்த நிலையில் 6 கோல்களை வாங்கியிருந்தது. அதேவேளையில் பாகிஸ்தான் 16 கோல்கள் அடித்த நிலையில் 4 கோல்களை வாங்கியிருந்தது.
2-வது சுற்றுக்கு ‘ஏ’பிரிவில் இருந்து ஜப்பான், இந்தியாவும் ‘பி’ பிரிவில் இருந்து மலேசியா, தென் கொரியாவும் தகுதி பெற்றுள்ளன. இந்த சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago