இந்தூர்: நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாட மிகவும் தாமதமாக அழைக்கப்பட்டார் ரஜத் பட்டிதார். அதன் காரணமாக அவர் தனது திருமணத்தை தள்ளிப்போட்டதாக தெரிகிறது.
நடப்பு சீசனின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்த போட்டியில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது ரஜத் பட்டிதாரின் சதம். நாக்-அவுட் போட்டியில் பயமறியாது அவர் லக்னோவை பந்தாடிய விதம் வெகுவாக போற்றப்பட்டு வருகிறது.
அதோடு ஐபிஎல் அரங்கில் பதிவு செய்யப்பட்ட சதங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வரிசையில் அவரது சதமும் இணைந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் பிளே-ஆஃப் சுற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்தாவது சதம் இது. நடப்பு சீசனில் ஆர்சிபி என்றதும் டூப்ளசி, கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் போன்ற பேட்ஸ்மேன்களின் விக்கெட்கள் தான் எதிர் அணிகளின் டார்கெட்டாக இருக்கும். அதோடு லோம்ரோர், ஷாபாஸ் அகமது போன்ற பின்ச் ஹிட்டர்களின் விக்கெட்களையும் எதிரணியினர் குறி வைப்பார்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அவுட்-ஆப்-தி-சிலபஸ் போல பேட் செய்துள்ளார் பட்டிதார்.
» IPL 2022 | நாக்-அவுட்டில் வெளியேறிய லக்னோ; ராகுலை பார்த்து முறைத்த கம்பீர்? - வைரல் க்ளிக்
மாற்று வீரர்: லக்னோ அணிக்கு எதிராக 54 பந்துகளில் 112 ரன்கள் விளாசினார் அவர். 28 வயதான அவர் இதுவரையில் 10 ஐபிஎல் இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தம் 346 ரன்கள் பதிவு செய்துள்ளார். கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக நான்கு போட்டிகள் விளையாடி, 71 ரன்கள் எடுத்திருந்தார். நடப்பு சீசனுக்கான மெகா ஏலத்தின் போது இவரை பெங்களூரு அணி ஏலத்தில் எடுக்கவில்லை.
பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த சிசோடியாவுக்கு காயம்பட்ட காரணத்தால் அவர் தொடரிலிருந்து விலகினார். அவருக்கு மாற்றாக கடந்த ஏப்ரல் வாக்கில் 20 லட்ச ரூபாய்க்கு அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார் பட்டிதார். நடப்பு சீசனில் 6 இன்னிங்ஸ் விளையாடி 275 ரன்கள் எடுத்துள்ளார் அவர். இதில் ஒரு சதம் மற்றும் அரை சதமும் அடங்கும்.
திருமணம் தள்ளிவைப்பு: நடப்பு சீசனில் அவர் ஏலத்தில் எடுக்கப்படாத காரணத்தால் இந்த இடைப்பட்ட காலத்தை பயன்படுத்தி திருமணம் செய்து கொள்ள பட்டிதார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவரது திருமண தேதி நடப்பு (மே) மாதத்தில் ஒரு சுப தினத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தும் கடைசி நேரத்தில் ஆர்சிபி அணி அவரை ஒப்பந்தம் செய்தது. அதன் காரணமாக திருமணத்தை தள்ளிப் போட்டுள்ளார்.
"என் மகனுக்கு மே 9-ஆம் தேதியன்று திருமணம் நடத்த முடிவு செய்திருந்தோம். எளிமையாக திருமண விழாவை நடத்தும் நோக்கில் இந்தூரில் ஒரு விடுதியை முன்பதிவு கூட செய்திருந்தேன். நெருங்கிய நண்பர்களும், குடும்பத்தினரும் மட்டுமே பங்கு கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடந்தது. அதனால் அழைப்பிதழ் ஏதும் அச்சிடவில்லை. இப்போது அவர் ஐபிஎல், பின்னர் ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடி முடித்த பிறகே அதற்கான வேலைகளை மேற்கொள்ள உள்ளோம். எப்படியும் ஜூலை வாக்கில் அவருக்கு திருமணம் செய்வோம்" என ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார் ரஜத் பட்டிதாரின் தந்தை மனோகர் பட்டிதார்.
யார் இவர்? மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர். எட்டு வயதில் தொழில்முறை கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியுள்ளார். முதலில் பவுலராக விளையாடி உள்ளார். பின்னர் பேட்டிங்கில் கவனம் செலுத்தியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணிக்காக கடந்த 2015 முதல் விளையாடி வருகிறார். கடந்த 2018-19 ரஞ்சிக் கோப்பை தொடரில் 8 போட்டிகள் விளையாடி 713 ரன்கள் சேர்த்திருந்தார். 2021 சீசனில் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் அரங்கில் விளையாடினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago