தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் | இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்

By செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தத் தொடரில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 9-ம் தேதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 போட்டிகள் தொடங்குகின்றன. இந்நிலையில், இந்த போட்டியில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, இந்தத் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், அணியின் தற்காலிக கேப்டனாக கே.எல்.ராகுலும், துணை கேப்டனாக ரிஷப் பந்தும் செய்லபாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஸ்னாய், அக்சர் பட்டேல், புவனேஸ்வர்குமார், ஹர்சல் பட்டேல், அவேஷ் கான், ஆர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்