சிட்டகாங்: "நான் சதம் பதிவு செய்தால் பிராட்மேனுடன் வங்கதேச மக்கள் என்னை ஒப்பிடுகிறார்கள்" என தெரிவித்துள்ளார் வங்கதேச கிரிக்கெட் வீரர் முஷ்பிகுர் ரஹிம்.
கடந்த 2005 முதல் வங்கதேச அணிக்காக சர்வதேச களத்தில் கிரிக்கெட் விளையாடி வருகிறார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹிம். 35 வயதான அவர் இதுவரையில் மொத்தம் 81 டெஸ்ட், 233 ஒருநாள் மற்றும் 100 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் அவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 5037 ரன்களை பதிவு செய்துள்ளார். வங்கதேச அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்ட்மேன் அவர் தான்.
இந்நிலையில், இந்த சாதனை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் முஷ்பிகுர் ரஹிம். "டெஸ்ட் அரங்கில் 5000 ரன்களை கடந்த முதல் வங்கதேச வீரர் என்பதில் மகிழ்ச்சி. இது வெறும் தொடக்கம் தான். முடிவு கிடையாது. 10000 ரன்களை கடக்கும் மகத்தான வீரர்கள் நம் அணியில் உள்ளனர். நான் நீண்ட நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டுமென விரும்புபவன்.
நான் சதம் பதிவு செய்தால் பிராட்மேனுடன் வங்கதேச மக்கள் என்னை ஒப்பிடுவதை கண்ணெதிரே பார்த்துள்ளேன். ஆனால் நான் ரன் சேர்க்க தடுமாறும் போது அதனை எனக்கு நானே தோண்டிக் கொண்ட குழியாக பார்க்கிறேன். நான் அணியில் சீனியர் வீரராக உள்ளேன். அதனால் நீண்ட நாட்கள் இங்கே இருக்கப்போவதில்லை. இது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது. இளம் வீரர்களுக்கு ஆதரவு கொடுப்பது அவசியம். களத்திற்கு வெளியில் நடக்கும் இதனை நான் சமாளித்துக் கொண்டிருந்தால் அது கள செயல்பாட்டை பாதிக்கச் செய்யும்" என தெரிவித்துள்ளார்.
» மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் | தங்கம் வென்றார் இந்தியாவின் நிகத் ஜரீன்; யார் இவர்?
» IPL 2022 | நிறைவு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் & ரன்வீர் சிங்; இறுதிப் போட்டி 30 நிமிடங்கள் ஒத்திவைப்பு
இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சதம் பதிவு செய்திருந்தார் முஷ்பிகுர் ரஹிம். இது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள சதமாக அமைந்துள்ளது,
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago