மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொண்டது டெல்லி கேபிடல்ஸ் அணி.
160 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு தொடக்கத்தில் ஷர்துல் தாக்குர் அழுத்தம் கொடுத்து அடுத்தடுத்து இரு விக்கெட்களை வீழ்த்தினார். இதைப் பயன்படுத்தி அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தங்களது சுழலால் கூட்டாக 7 ஓவர்களை வீசி 28 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
இதனால் பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி 14 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறியது. 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள டெல்லி 7 வெற்றி, 6 தோல்விகளை பதிவு செய்துள்ளது.
அதேவேளையில் பஞ்சாப் அணி 13 ஆட்டங்களில் 6 வெற்றி, 7 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தற்போதைய தோல்வியால் பஞ்சாப் அணயின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது.
வெற்றி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறும்போது, “இந்தத் தொடர் முழுவதுமே ஒரு ஆட்டத்தில் வெற்றி, அடுத்த ஆட்டத்தில் தோல்வியை பெற்றிருந்தோம். இதை ஒரு அணியாக மாற்ற விரும்பினோம். அதை அடைந்துள்ளோம். லிவிங்ஸ்டனின் வேகத்தை மாற்றி வீசியது நன்றாக இருந்தது, இது விளையாட்டின் ஒரு பகுதி. வார்னர் மீது குறைகூற முடியாது. ஏனெனில் இந்தத் தொடர் முழுவதும் அவர், அற்புதமாக விளையாடி வருகிறார்.
பந்து வீச்சில் குல்தீப் யாதவுக்கு கூடுதலாக ஒரு ஓவரை வழங்காததற்கு காரணம், ஆட்டத்தின் பிற்பாதியில் நாங்கள் அவரை பாதுகாத்தது தான்.
அதன் பின்னர் பனிப்பொழிவு இருந்தது. இதனால் ஒருவருக்காக மட்டும் பெரிய ஓவரை கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. அந்த சூழ்நிலையில் ஆட்டத்தின் போக்கு இரு அணிக்கும் சமநிலையிலேயே இருந்தது” என்றார்.
இன்றைய ஆட்டம்
கொல்கத்தா - லக்னோ
நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago