'இதுதான் என் கடைசி ஐபிஎல்' - ட்வீட் செய்து நீக்கிய அம்பத்தி ராயுடு

By செய்திப்பிரிவு

"இதுதான் எனது கடைசி ஐபிஎல்" என்று ட்விட்டரில் பதிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பத்தி ராயுடு பின்னர் அதனை நீக்கி இருக்கிறார்.

முன்னதாக அம்பத்தி ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுதான் நான் பங்கேற்கும் கடைசி ஐபிஎல் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். 13 வருடங்களில் ஐபில் 2 சிறந்த அணிகளில் அங்கம் வகித்து விளையாட எனக்கு ஓர் அற்புதமான நேரம் கிடைத்தது. இந்த அற்புதமான பயணத்தை அளித்த மும்பை இந்தியன்ஸ் , சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் இப்பதிவை சில நிமிடங்களில் நீக்கினார். இதுகுறித்து எந்த விளக்கத்தை அவர் இதுவரை அளிக்கவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் தனக்கு இடம் கிடைக்காத நிலையில் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்தார். தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் ராயுடு.

ஐபிஎல்லில் 181 போட்டிகளில் விளையாடி உள்ள அம்பத்தி ராயுடு இதுவரை 4,000 ரன்களை குவித்துள்ளார். இதில் 22 அரை சதமும், ஒரு சதமும் அடித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்