IPL 2022 | டீன் ஏஜ் பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்: திலக் வர்மா புதிய சாதனை

By செய்திப்பிரிவு

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே சீசனில் டீன் ஏஜ் பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார் 19 வயதான திலக் வர்மா.

நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் இளம் வீரர் திலக் வர்மா. இடது கை பேட்ஸ்மேனான அவர் ஹைதராபாத் நகரை சேர்ந்தவர். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடியவர். அவரை 1.7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது மும்பை அணி. அது பலரது பார்வையை அவர் பக்கமாக திரும்ப செய்தது.

இந்நிலையில், நடப்பு சீசனில் இதுவரையில் 12 போட்டிகளில் விளையாடி 368 ரன்கள் எடுத்துள்ளார் அவர். மேலும் இரண்டு போட்டிகளில் அவரை விளையாட உள்ளார். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 40.89. இந்த சீசனில் மும்பை அணி கண்டெடுத்த மாணிக்கம் அவர்.

இந்த 368 ரன்கள் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை ஐபிஎல் கிரிக்கெட்டில் சத்தமே இல்லாமல் பதிவு செய்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே சீசனில் டீன் ஏஜ் பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை தான் அது.

இதற்கு முன்னர் டீன் ஏஜ் பேட்ஸ்மேன்களில் ஒரே சீசனில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் - 366 ரன்கள் (2017), பிரித்வி ஷா - 353 ரன்கள் (2019), சஞ்சு சாம்சன் - 339 ரன்கள் (2014).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்