IPL 2022 | 'எனது உணர்வை அவர்களால் உணர முடியாது' - விமர்சகர்களுக்கு பதிலடி தந்துள்ள கோலி

By செய்திப்பிரிவு

மும்பை: "எனது உணர்வை அவர்களால் உணர முடியாது. எனது வாழ்வை அவர்களால் வாழ முடியாது" என தெரிவித்துள்ளார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. அவரது மோசமான ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டை தனது பேட்டையாக மாற்றி, அதில் பேட் கொண்டு ஆட்சி செய்து வரும் அரசன் தான் இந்திய வீரர் விராட் கோலி. ஒருநாள், டி20, டெஸ்ட் என இந்தியாவுக்காக மொத்தம் 23650 ரன்கள் எடுத்துள்ளார். அது தவிர ஐபிஎல் களத்தில் 6499 ரன்கள் சேர்த்துள்ளார். தனியொரு பேட்ஸ்மேன் பதிவு செய்த அதிகபட்ச ரன்கள் இது. அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் சாதனைகளுக்கான மைல் கற்களாக மாற்றி அமைப்பவர். நடப்பு ஐபிஎல் சீசனில் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ரன் குவிக்க தடுமாறி வருகிறார்.

இந்நிலையில், அவரை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் என அவருக்கு ஆதரவாகவும், அவரது ஆட்டத்தை விமர்சித்தும் வருகின்றனர். 'இந்த எரிமலையில் ஈரத்துணி போட்டதாரடா?!' என்ற தொனியில் சிலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் ஆர்சிபி அணிக்காக மிஸ்டர் நாக்ஸ் உடன் பேசியுள்ளார் கோலி. அதில்தான் இதனை தெரிவித்துள்ளார்.

"எனது உணர்வை அவர்களால் உணர முடியாது. எனது வாழ்வை அவர்களால் வாழ முடியாது. அவர்களால் அந்த தருணத்தை வாழ முடியாது. அதனால் இந்த இரைச்சலை எப்படி குறைக்க முடியும்? ஒன்று டிவியை மியூட் செய்துவிட வேண்டும் அல்லது அதனை நாம் கவனிக்க கூடாது. நான் இந்த இரண்டையும் செய்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

<iframe width="668" height="376" src="https://www.youtube.com/embed/MRc8u7QF-8A" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்